நூல் அரங்கம்

மனிதர்கள் - நா.கிருஷ்ணமூர்த்தி

3rd May 2021 11:37 AM

ADVERTISEMENT

மனிதர்கள் - நா.கிருஷ்ணமூர்த்தி; பக்.104; ரூ.160; க்ரியா, புதிய எண்.2, பழைய எண்.25, 17 -ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை-600 041.
 நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான நா.கிருஷ்ணமூர்த்தி, 1965 - 1975 காலகட்டத்தில் எழுதிய 6 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
 மனித வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களை மிக இயல்பாகச் சித்திரிப்பவையாக இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் உள்ளன.
 வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆற்றில் குதித்து துணிச்சலாகப் பலமுறை நீந்தி கரை கடந்த அண்ணாமலை, தோணியில் ஏறி ஆற்றைக் கடக்க விரும்பும் சிதம்பரத்தை வலுக்கட்டாயமாக ஆற்றினுள் இறக்கி, இருவரும் ஆற்றை நீந்திக் கடந்து செல்கிறபோது, சுழியில் மாட்டிக் கொள்ளும்நிலை வருகிறது. சிதம்பரத்தை ஆற்றினுள் விட்டுவிட்டு, தான் மட்டும் தப்பித்து கரையேறி நடந்து போகிறான் அண்ணாமலை "மனிதர்கள்' சிறுகதையில்.
 கிராமப்புறங்களில் ஏற்பட்டு வந்த மாற்றங்களைச் சொல்லும் "காலமெனும் தூரம்', வேலைக்குச் செல்லும் ஆண்களின் - பெண்களின் மனதில், நடை, உடை பாவனைகளில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் "உதிரும் மலர்கள்', பியூர் இண்டலெக்சுவலான ரகு, அவனுடைய நண்பன் வேணு மற்றும் பிந்து ஆகியோரிடையேயான உறவைச் சொல்லும் "வருகை' என அனைத்துச் சிறுகதைகளுமே வித்தியாசமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. பெண்ணின் உணர்வுகள், மனப்போக்கு, அவற்றை பெண் நடைமுறையில் வெளிப்படுத்தும் வித்தியாசமான தன்மை ஆகியவற்றை மிக இயல்பாகச் சித்திரிக்கிறது " ஓர் இரவின் பிற்பகுதியில்' சிறுகதை.
 மிகுந்த கலைத்தன்மையோடு எழுதப்பட்டுள்ள சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT