நூல் அரங்கம்

நாடு அழைத்தது

3rd May 2021 11:44 AM

ADVERTISEMENT

நாடு அழைத்தது- ஜெய்பால் சிங்; தமிழில்-அருணானந்த்; பக்.176; ரூ.160; அலைகள் வெளியீட்டகம், 5-1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், ராமாபுரம், சென்னை- 600 089.
 விடுதலைப் போராட்ட வீரர் ஜெய்பால்சிங் எழுதிய சுயசரிதைதான் "நாடு அழைத்தது' நூலின் பெரும்பான்மையான பகுதி. ஏறத்தாழ 100 பக்கங்கள். பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய ராணுவத்தில் சாதாரண சிப்பாய் பதவியில் சேர்ந்து மேஜர் அளவுக்கு உயர்ந்தவர் ஜெய்பால்சிங். ராணுவத்திலேயே சங்கம் அமைத்தவர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கு உதவியாக இருந்தவர்.
 நாட்டின் விடுதலைக்குப் பிறகு தெலங்கானா மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு, அந்த மக்களுக்கு கொரில்லா போர்ப்பயிற்சிக்கு உறுதுணையாக பயிற்சி வழங்கியவர். பிற்காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மாறியவர்.
 விடுதலைக்குப் பிறகு அமைந்த அரசின் பிரதமர் நேருவுக்கு ஜெய்பால் சிங் எழுதிய கடிதம் முக்கியமானது. அந்தக் கடிதம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. நாட்டின் விடுதலைக்கு முன்பு பிரிட்டிஷ் அரசு தெலங்கானா மக்கள் போராட்டத்தை எப்படிக் கையாண்டது என்பதும், அதன் பிறகு சொந்த நாட்டு மக்களின் போராட்டத்தை நேரு அரசு எப்படிக் கையாண்டது என்பதையும் அறிய இந்தக் கடிதம் உதவியாக இருக்கும்.
 "பங்களாதேஷ் தேசிய விடுதலைப்போர்' என்ற கட்டுரையும், "தோழர் ஜெய்பாலுக்கு புரட்சி அஞ்சலி' என மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் எழுதிய கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
 நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், இன்னும் அறியப்படாமல் இருக்கும் இன்னொரு பக்கத்தை ஜெய்பால்சிங்கின் சுயசரிதை நமக்குக்காட்டுகிறது. எல்லாரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT