நூல் அரங்கம்

இந்தியா - அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

29th Mar 2021 10:47 AM

ADVERTISEMENT

இந்தியா - அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு: ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498 - 1765) - ராய் மாக்ஸம், தமிழில் - பி.ஆர். மகாதேவன்; பக். 280; ரூ. 325; கிழக்கு பதிப்பகம், சென்னை -14, )044-4200 9603.
 ராய் மாக்ஸமின் "தி தெப்ஃட் ஆஃப் இந்தியா' நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.
 இந்தியாவின் உப்புவேலி, ஆப்பிரிக்காவின் தேயிலைச் சுரண்டல் பற்றிய நூல்களுக்கான தரவுகளைத் தேடியபோது கண்டடைந்த தகவல்களின் அடியொற்றி மேற்கொண்ட தொடர் தேடுதல்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
 இந்தியா மீதான ஆக்கிரமிப்பு கால கறுப்புப் பக்கங்களை விவரிக்கும் இந்நூலில், ஐரோப்பிய ஆதிக்க சக்திகளின் பேராசைகளையும் இரக்கமில்லா கொலைகாரத்தனங்களையும், எழுதியவர்களைப் பற்றிய குறிப்புகளுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
 1498, மே 20 வாஸ்கோடகாமாவின் இந்திய வருகையுடன் தொடங்கும் நூலில் தொடர்ந்து, பிரிட்டிஷார், பிரான்ஸ் வணிகர்கள் என... வருகைகளும் செல்வாக்குகளும் வீழ்ச்சிகளும் பதிவு செய்யப்படுகின்றன. நூலில் கோவா பற்றிய சித்திரிப்பு மிகச் சிறப்பு.
 கிழக்கிந்திய கம்பெனி, அதற்குப் போட்டியாக அனுமதிக்கப்பட்ட கம்பெனி ஆகிய இவற்றின் நகர்வுகளும் அரசியல் உச்சங்களும் நன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
 எண்ணற்ற மூல நூல்களை, வரலாற்று ஆசிரியர்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகோலாகத் திகழும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT