நூல் அரங்கம்

மனம் அது செம்மையானால்?

15th Mar 2021 08:57 AM

ADVERTISEMENT

மனம் அது செம்மையானால்? - க. மணி; பக்: 160; ரூ.200; அபயம் பப்ளிஷர்ஸ்,19, ஏ.கே.ஜி. நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை - 641 015.
 மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்?இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் இந்நூலில் விளக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர்.
 மேல்மனம் என்பதையும் ஆழ்மனம் என்பதையும் வேறுபடுத்தி விளக்கியுள்ளார் (மேல்மனம் அறிவுமயமானது; ஆழ்மனம் உணர்வு மயமானது).
 நம் உயிர்தான் நம் மனம் என்பதை தெளிவாக விளக்குகிறார். " மனம் உடலில் உள்ளவரை உடல் உயிருடன் செயல்படும். உடலைவிட்டு மனம் விலகியதும், உடல் பிணமாகிவிடும். உடல் எரிக்கப்பட்டவுடன் எது எஞ்சி நிற்கிறதோ அது மனம்' என்கிறார்.
 மனத்தின் நான்கு கூறுகளாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். நமது ஐந்து புலன்களின் தன்மைகளையும் அறிய உதவுவது மனம்தான். அதாவது ஒரு மாம்பழத்தைப் பார்த்ததும் அதன் நிறம், வடிவம், மணம், சுவை, மென்மை ஆகிய ஐந்து புலன்கள் தொடர்பானவற்றை அறிவதற்குக் காரணம் மனம்தான் என்று விளக்குகிறார்.
 மனம், வாக்கு, காயம் குறித்தும் திருஷ்டம், அதிருஷ்டம் குறித்தும் பல புதிய தகவல்களை அறிய முடிகிறது.
 இது பொழுதுபோக்குக்கான நூல் அல்ல. புதுப்புது செய்திகள் பலவற்றையும் விரிவாகவும் தர்க்க ரீதியாகவும் விளக்கும் நல்ல நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT