நூல் அரங்கம்

துளிர் அறிவியல் கட்டுரைகள்

DIN

துளிர் அறிவியல் கட்டுரைகள் - தொகுப்பு: துளிர் ஆசிரியர் குழு; பக்.152; ரூ.150; அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86.
 துளிர் மாத இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குழந்தைகளுக்குப் புரியும்வண்ணம் மிக எளிமையாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியவையாக உள்ளன. கரோனா வைரஸ் பற்றி "உலகையே ஆளும் வைரஸ்' கட்டுரை விவரிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லாம் இணைந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. மருத்துவ உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும்விதமாக "மருத்துவர்களுக்கு உதவும் பொறியியல் தொழில்நுட்பங்கள்' கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
 காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, பறவைகள்,திமிங்கலச்சுறாக்கள், கடல் ஜெல்லிகள் என அறிவியலின் பல்வேறு தளங்களில் பயணிக்கும் கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஓரிகாமி காகித மடிப்புக்கலை, சவர்க்காரம் செய்யும் முறை, நான் ஸ்டிக் தோசைக்கல் என வித்தியாசமான பலரும் அறியாத தகவல்களைச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.
 "பசு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது' என்ற கூற்று உண்மையானதா என்று ஒரு கட்டுரை ஆராய்கிறது. உயிரினங்கள் சுவாசிக்கும் எல்லா முறைகளைப் பற்றியும் விவரித்து, பசு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடவில்லை என்கிற முடிவுக்கு வருகிறது.
 கடந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட அறிவியலாளர்கள் பற்றியும், அவர்களுடைய கண்டுபிடிப்புகளைப் பற்றியும் "நோபல் பரிசு 2020 வேதியியல் மரபணு கத்தரிக்கோல்' கட்டுரை விளக்குகிறது.
 அறிவியல் மனப்பான்மை அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் வண்ணப் படங்களுடன் அனைவரையும் கவரும்விதமாக வெளியிடப்பட்டுள்ள பயனுள்ள நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT