நூல் அரங்கம்

நல்லுறவே நம் உயர்வு

25th Jan 2021 10:27 AM

ADVERTISEMENT

நல்லுறவே நம் உயர்வு- லேனா தமிழ்வாணன்; பக்.188; ரூ.160; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044-2434 2926.
 நம் வாழ்வின் பார்வைகள் மாறினால், நம் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டால் ஏற்படக் கூடிய நன்மைகள் எவை என்பதை பல்வேறு வெற்றிக் கதைகள், நிகழ்ச்சிகள், சுவாரஸ்யமான தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
 மனிதர்கள், தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட சறுக்கல்களுக்கும், சங்கடங்களுக்கும் பிரச்னைகளுக்குமான காரணங்களைப் பிறர் மீது சுமத்துவதைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், "மற்றவர்கள் மாற வேண்டும்; என்னைச் சுற்றியிருப்பவர்கள் திருந்த வேண்டும்; பிறகு என்னை மாற்றிக் கொள்கிறேன் என எண்ணும் மனப்போக்கு நமக்குள் இருக்கும் வரை எந்த மாற்றமும் வளர்ச்சியும் இருக்கப்போவதில்லை' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
 "நம்முடைய முதல் எதிரி யார்?', "திறக்காத வாய்கள் திறக்கின்ற பரிசுகள்', "பணத்தைப் பற்றிய பார்வைகள் மாறட்டும்', " கோபத்தைக் கைவிடுங்கள்' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சிறு சிறு அத்தியாயங்கள் மூலமாக நம் அன்றாட வாழ்வில் அவ்வப்போது நிகழும் சிக்கல்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிகளையும் பேச்சு வழக்கில் எளிய நடையில் நூல் விவரிக்கிறது.
 நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு "நல்லுறவே நம் உயர்வு' சிறந்த ஒரு வழிகாட்டியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT