நூல் அரங்கம்

மேலோரும் நூலோரும்

4th Jan 2021 12:09 PM

ADVERTISEMENT

மேலோரும் நூலோரும் - ஜோசப்குமார்; பக்.277; ரூ.280; காவ்யா வெளியீடு, சென்னை-24; )044-2372 6882.
 பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், விடுதலை வீரர்கள் மற்றும் அரசியல், கலையுலகப் பிரமுகர்கள் குறித்த பல்சுவையான கட்டுரைகள் அடங்கிய நூல். மகாகவி பாரதியாருடன் சம காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர் அ.மாதவையாவின் (1872-1925) படைப்பிலக்கியங்கள் குறித்த கட்டுரையுடன் நூல் தொடங்குகிறது.
 சிறு வயதில் அ.மாதவையா பாரதியாருடன் ஒரு கவிதைப் போட்டியில் பங்கேற்றதும், அப்போட்டியில் மாதவையா வெற்றி பெற்றதுமான தகவல் அபூர்வமானது. 1903-இல் மாதவையா ஆங்கிலத்தில் எழுதிய "தில்லை கோவிந்தன்' என்ற புதினம் தேவதாசி முறையை வன்மையாக எதிர்க்கிறது. அவர் எழுதிய "கிளாரிந்தா' (1915) என்ற புதினம் பற்றியும் விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
 பன்மொழி அறிஞர் எல்.டி.சுவாமிக்கண்ணு குறித்த கட்டுரையில், சிலப்பதிகாரம் மற்றும் பரிபாடல் உருவான காலம் பற்றிய அவரின் ஆய்வுகள் வியப்பூட்டுகின்றன. கவிஞர், எழுத்தாளர் அம்ரிதா பிரீதம் வாழ்வில் ஏற்பட்ட காதல் அனுபவங்கள் என இந்நூல் பல்சுவை விருந்தாக அமைந்திருக்கிறது.
 டி.ஹெச்.லாரன்ஸ் எழுதிய "சாட்டர்லி பெருமாட்டியின் காதலன்', "அகநானூறு காட்டும் காதல் சித்திரங்கள்', "புற நானூற்றுப் பெண்ணும், பெண்மொழியும்', "யாழதிகாரம்', "பூம்புகார்' உள்ளிட்ட தலைப்புகளிலான கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
 முகமது அலி ஜின்னா, விக்டோரியா மகாராணி, சரஸ்வதி மேரி ரமாபாய், பகத்சிங், பெரியார், குஷ்வந்த்சிங், எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோரைப் பற்றிய அரிய தகவல்களுடன் கருத்துக் கருவூலமாக இந்நூல் திகழ்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT