நூல் அரங்கம்

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்துமன் கி பாத்

22nd Feb 2021 11:23 AM

ADVERTISEMENT

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்துமன் கி பாத் - வேலூர் எம்.இப்ராஹிம்;பக்.160; ரூ.180;கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; )044- 4200 9603.
 மதவெறி மிகுந்திருக்கும் ஆபத்தான காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக மிளிர்கிறார் நூலாசிரியர்.
 ஒருகாலத்தில் தீவிர பாஜக எதிர்ப்பாளராக இருந்த அவர், சில ஆண்டுகளாக பாஜகவின் மீது நல்லெண்ணத்தை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன்மூலம், தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்து செல்ல விழைபவர்களைச் சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.
 இது எளிய செயலல்ல. இந்த மத ஒற்றுமைப் பணியில் ஈடுபடுவதால் இவரது குடும்பமே சமுதாயரீதியாக ஒதுக்கிவைக்கப்பட்டது; பலமுறை வன்முறையாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வகையில் இயங்கி வருகிறார். பாஜக மேடையிலிருந்து கொண்டே, வெறுப்புக் கோஷமிடும் அக்கட்சித் தொண்டர்களைக் கண்டிக்கவும் இப்ராஹிம் தயங்குவதில்லை.
 "அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும்; காஃபிர் என்பது கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களையே குறிக்கும்; சிஏஏ சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது; காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது அவசியம்; ஆர்எஸ்எஸ் அமைப்பை நெருங்கிப் பார்த்து இஸ்லாமியர்கள் அந்த அமைப்பின் சிறப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்; சம்ஸ்கிருதம் மீட்கப்பட வேண்டிய அறிவுமொழி' - போன்றவை வேலூர் இப்ராஹிமின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மிகச் சில உதாரணங்கள்.
 நூலின் தொடக்கத்திலேயே "பாரத தேசத்தை உண்மையாக நேசிக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம்' என்றும், "நான் மதத்தால் இஸ்லாமியன், தேசத்தால் இந்தியன், மொழியால் தமிழன் ' என்றும் பிரகடனம் செய்திருக்கிறார். அவரது நினைவோடையில் எழுந்த இனிய கருத்துகள் இந்நூலில்அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT