நூல் அரங்கம்

என் வாழ்க்கைச் சுவடுகள்

22nd Feb 2021 11:16 AM

ADVERTISEMENT

என் வாழ்க்கைச் சுவடுகள்- ச.கணபதிராமன்; பக். 256; நன்கொடை ரூ.1; 48, மாரியம்மன் கோயில் தெரு, அய்யாபுரம், தென்காசி-627805.
 தென்காசித் திருவள்ளுவர் கழகத் தலைவர் ச.கணபதிராமன் தனது வாழ்க்கைப் பயணத்தை ஒரு வரலாறாக எழுதியிருக்கிறார்.தென்காசி வட்டத்தைச் சேர்ந்த அய்யாபுரம் எனும் சிறு கிராமத்தில்பிறந்து, தென்காசி, சிதம்பரம், சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில், தான் ஆற்றிய கல்விப் பணி, இலக்கியப் பணி, சமூகப் பணிகளை நினைவின் அடுக்குகளிலிருந்து அள்ளித் தந்திருக்கிறார்.
 தென்காசி திருவள்ளுவர் கழகத்துக்கு வருகை தந்த ரா.பி.சேதுப்பிள்ளையின் அறிமுகம், அதைத் தொடர்ந்து அவரது உதவியால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புலவர் படிப்பு பயிலக் கிடைத்த வாய்ப்பு ஆகியவைதான் தனது வாழ்க்கைப் பயணத்தின் முதல் படிக்கட்டாக அமைந்தது எனப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். ரா.பி.சேதுப்பிள்ளையின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நூலாசிரியர் கடந்து செல்வதன் மூலம் அக்காலகட்டத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
 கடையத்தில் இரு ஆண்டுகள் மகாகவி முழுமையாகத் தங்கியிருந்தபோது படைத்த படைப்புகள், பழகிய மனிதர்கள், எந்தப் பின்புலத்தில் என்ன பாடல்களைப் படைத்தார் என கள ஆய்வுக்குப் பின் கண்டறிந்து நூலாசிரியர் படைத்த நூலே "கடையத்தில் உதிர்ந்த பாரதியின் படையல்கள்' எனத் தெரிவித்திருப்பது வியக்க வைக்கிறது.வாழ்க்கை வரலாற்று நூலாக மட்டுமன்றி,சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்து இப்போது வரையிலான கல்வி, சமூக, அரசியல் விஷயங்களையும் தொட்டுச் சென்று சுவையான வாசித்தல் அனுபவத்தைத் தருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT