நூல் அரங்கம்

எங்கெங்கும் மாசுகளாய்

2nd Aug 2021 01:35 PM

ADVERTISEMENT

எங்கெங்கும் மாசுகளாய்... மண் முதல் விண் வரை (சூழலியல் கட்டுரைகள்) - ப.திருமலை; பக். 118; ரூ.110; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50; )044-2625 1968.
சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; ஆனால், மனிதர்கள் இதனை மறந்து இயற்கைக்கு எதிரான செயல்களில் கட்டுப்பாடின்றி ஈடுபடுவதால் கடுமையான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என அழுத்தமாக உரைக்கிறது நூல்.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பாரீஸ் பருவநிலை மாநாட்டின் தீர்மானங்களை எத்தனை நாடுகள் கடைப்பிடிக்கின்றன எனக் கேள்வி எழுப்புகிறது ஒரு கட்டுரை. இயற்கைச் சமநிலையைப் பேண பல்லுயிர்ச் சங்கிலி வலுவாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் கேடு, அவற்றைத் தவிர்ப்பது பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
பூமியின் முக்கால் சதவீத பரப்பளவைக் கொண்டுள்ள கடல் இன்று மாசுகளின் சங்கமமாகத் திகழ்கிறது; 2050-ஆம் ஆண்டில் ஆர்க்டிக் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பது எப்படி என்று ஆலோசனை கூறுகிறது "வனமே செளக்கியமா?' என்ற கட்டுரை.
இதுதவிர யானைகள், பறவைகளின் அவசியம், காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசு என சூழலியல் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் ஆழமாகப் பேசுகிறது இந்நூல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT