நூல் அரங்கம்

அண்ணல் அம்பேத்கர்

2nd Aug 2021 01:27 PM

ADVERTISEMENT

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம் - பசுபதி தனராஜ்; பக்.336; ரூ.300; கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், சென்னை-109; )044 - 2638 5272.
அம்பேத்கரின் வாழ்க்கையை - சிந்தனைகளை- பணிகளை- சாதனைகளை அறிமுகப்படுத்தும் நூல்.
அம்பேத்கரின் இளமைப் பருவத்தில் அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகள்,அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பள்ளிப் படிப்பை முடித்த அம்பேத்கரின் சிந்தனையை பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட் எழுதிய "கெளதம புத்தர்' என்ற புத்தகம் மாற்றி அமைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இண்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்ற அம்பேத்கர் மேல் படிப்பு படிக்க வசதியில்லாமல் தவித்தபோது, பரோடா மன்னர் கெய்க்வாட் உதவியினால்தான் கல்லூரியில் சேர்ந்து அவர் படிக்க முடிந்திருக்கிறது. அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பயில்வதற்கும் பரோடா மன்னரே உதவி செய்திருக்கிறார்.
சட்டம் பயின்று வழக்கறிஞரான அம்பேத்கர், அதன் பிறகு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி அவர் நடத்திய மகத் மாநாடு, நாசிக் நகரில் உள்ள காலாராம் கோயில் நுழைவுப் போராட்டம் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர்முறை பிரச்னையில் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் பற்றியும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கான சொத்துரிமை, பெண்களின் மறுமணம் போன்றவற்றை வலியுறுத்தி "இந்து சட்ட மசோதாவை' அம்பேத்கர் உருவாக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சி செய்தது, அது இயலாமற் போனதால் மத்திய சட்ட அமைச்சர் பதவியை அம்பேத்கர் துறந்தது உள்பட அம்பேத்கரின் சிந்தனைகளை, போராட்ட வாழ்க்கையை மிக அற்புதமாக இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT