நூல் அரங்கம்

தமிழ் நாட்டுப்புறவியல்

DIN

தமிழ் நாட்டுப்புறவியல் - டி.தருமராஜ்; பக்.240; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044- 4200 9603.
 தமிழ் நாட்டுப்புறவியல் தொடர்பான இந்நூலில் " கலைஞர்களின் கூத்து', "மூன்று தமிழ்ப் பெண்கள்', "தேவேந்திரர்களின் அம்மன்கள்: வழக்காறிலிருந்து வரலாற்றிற்கு' "தமிழ் நாட்டுப்புறவியல்' உள்பட எட்டு கட்டுரைகள் உள்ளன.
 தமிழ்நாட்டுப்புறவியல் என்பதன் மையமான புள்ளியாக ஒடுக்கப்பட்ட மக்களே இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே தங்களுடைய வரலாற்றை, அறிவை, தத்துவத்தை, அறிவியலைப் பாதுகாத்து வைக்கும் சேமக்கலனாக வழக்காறுகளைக் கருதுகின்றனர்; அவர்களுடைய பண்பாட்டை வெளிக்காட்டும் அடையாளமாகவே நாட்டுப்புறவியலை நாம் பார்க்க வேண்டும் என்பதை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
 சாதியத் துவேஷங்களை வெளிப்படுத்தும் கதைகளுக்கும் பாடல்களுக்கும் பழமொழிகளுக்கும்புராணங்களுக்கும் நம்மிடம் பஞ்சமில்லை. நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, சாதியின் பெயரால் கொலை செய்யப்பட்ட மனிதர்களே; பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வட்டச் சடங்குகளில் செயல்படும் தீண்டாமே கொடூரமானது. இவ்வாறு திரும்பிய புறமெல்லாம் வியாபித்து நிற்கும் சாதிய உரையாடல்களையும் செயல்பாடுகளையுமே நாட்டுப்புறவியல் கலை என்றும் பண்பாடு என்றும் சிலாகித்து வருவதும், நாட்டுப்புறவியலின் சாதியக் குணங்களை மறைத்துவிடும் போக்கும் உள்ளதாக நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT