நூல் அரங்கம்

அஷ்டாவக்ர கீதை

12th Apr 2021 11:20 AM

ADVERTISEMENT

அஷ்டாவக்ர கீதை - க.மணி; பக்.350; ரூ.400; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி.நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோயமுத்தூர்-641015.
 அஷ்டாவக்ரர் என்கிற ஞானி ஒரு துறவி. மன்னர் ஜனகர் ஒரு கர்மயோகி. இருவரும் சந்தித்து தத்துவார்த்தமாக உரையாடினால் எப்படி இருக்கும்? இந்த உரையாடல்களின் தொகுப்பே இந்நூல்.
 இருபது அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நூலில் பதினொரு அத்தியாயங்கள் அஷ்டாவக்ரருடைய உபதேசமாகவும், ஒன்பது அத்தியாயங்கள் ஜனகர் தனது அனுபவங்களைக் கூறும்விதமாகவும் அமைந்துள்ளன.
 ஞானி என்பவன் யார் என்று கூறுமிடத்தில் அஷ்டாவக்ரர், "ஞானி என்பவன் எந்த குலத்தையும் சேர்ந்தவன் அல்லன். அவன் வடிவம் உடம்பு அல்ல. அதனால் அவன் ஆணுமல்ல; பெண்ணுமல்ல. அவன் வடிவமற்ற சித்சொரூபன்' என்று கூறுகிறார்.
 " ஞானமின்றி மோட்சமில்லை' என்று உறுதிபடக் கூறும் அஷ்டாவக்ரர், அந்த ஞானம் மட்டுமே இருந்தால் போதும் என்று எண்ணுவது தவறு என்று குறிப்பிடுகிறார்.
 மேலும் "ஞானிகள் என்போர் உலகத்தார் எண்ணிக் கொண்டு இருப்பது போன்ற அடையாளங்களுடன்தான் இருப்பார்கள் என்று எண்ண வேண்டாம். அவர்களும் சாதாரண மனிதர்களைப் போலவேதான் இருப்பார்கள். எந்தக் கூட்டத்திலும் தனித்தன்மையோடு இருக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு' என்று குறிப்பிடுகிறார் அஷ்டாவக்ரர் (ஏறக்குறைய நம்முடைய சித்தர்கள் கூறியது போல).
 உயர்ந்த விஷயங்களை எளிய நடையில் விளக்கும் குறிப்பிடத்தக்க நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT