நூல் அரங்கம்

101 கேள்விகள் 100 பதில்கள்

DIN

101 கேள்விகள் 100 பதில்கள் - சு.தினகரன்;பக்.102; ரூ.80; அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-600 086.
 பலவிதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை நிறுத்தி, அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான பதில்களையும் இந்நூல் கூறுகிறது. நமக்குத் தெரியாத, நமக்கு வியப்பூட்டுகிற பல அறிவியல் தகவல்கள் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும்விதத்தில் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல நமது அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியவையாகவும் இருக்கின்றன.
 ஸ்வீடனைச் சேர்ந்த உப்பசாலா பல்கலைக்கழக ஆய்வுக்குழு தினமும் பால் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு பலவீனப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
 வயதாகும்போது நினைவாற்றல் குறையும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, நமது மூளையின் திசுக்கள் சேதமடைவதே நினைவாற்றல் குறைவதற்குக் காரணம் என்று சிகாகோவின் ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
 "ஓ' ரத்த வகை உள்ளவர்களை, குண்டாக இருப்பவர்களை, கர்ப்பிணி பெண்களை கொசு அதிகம் கடிக்கிறது.
 கிரனடா பல்கலைக்கழக சோதனை உளவியல்துறை வல்லுநர்கள் தெர்மோகிராபிக் கேமராவின் மூலம் ஒருவர் பொய் சொல்வதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
 யானைகள் தேனீக்களுக்குப் பயப்படும். யானையின் கண்களுக்கு அருகே, தும்பிக்கையில் தேனீக்கள் கொட்டிவிடுவதே இதற்குக் காரணம்.
 இவ்வாறான பல அரிய அறிவியல் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT