நூல் அரங்கம்

சிந்தனை, செயல், வெற்றி

30th Mar 2020 08:32 AM

ADVERTISEMENT

சிந்தனை, செயல், வெற்றி - மெ.ஞானசேகர்; பக்.260; ரூ.200, கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ், சென்னை-109; ) 044 - 2638 5272.
 சிந்தனை, செயல், வெற்றி என்ற தத்துவத்தைப் பின்பற்றினால் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதற்கான வழிகளை பல்வேறு வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய எடுத்துக்காட்டுகளுடன் கூறியுள்ளார் நூலாசிரியர்.
 நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் நம்மைவிட மேலானவர் என்று நினைப்பது நல்லது.
 அத்துடன் நம்முடைய கற்பனை, சிந்தனை, முன்னேற்றத்துக்கான செயல்பாடுகள், நேர்மறை எண்ணங்கள், பழக்க வழக்கங்களில் சிறிய அளவிலான மாற்றம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே போதும், நாம் எண்ணிய வாழ்க்கையைப் பெறுவதற்கான சிறந்த வழி என்பதை நூலில் முன்னுதாரணங்களுடன் வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.
 மனம் என்னும் மாபெரும் சக்தி, பருவங்கள் சொல்லும் பாடங்கள், நிறைகளை வெளிக்காட்டு குறைகள் என 35 தலைப்புகளில் இந்நூலில் அமைந்துள்ள கட்டுரைகளில், உலக அளவில் பல்வேறு தகவல்களையும், சிறப்பான முன்னேற்றப் பாதைக்கு உதவும் கதைகளையும் கூறியிருப்பதால், படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் நூலாக இது அமைந்துள்ளது.
 மனித வாழ்வில் சவால்களையும், போராட்டங்களையும், எதிர்ப்புகளையும், கூட இருந்தே குழிபறிப்பவர்களையும் சமாளித்துதான் முன்னேற வேண்டியிருக்கிறது.
 இந்த மனமாற்றம் பெறுவதற்கான மனவலிமை நாம் இலக்கின் மீது கொண்டிருக்கக் கூடிய "நம்பிக்கை' மூலம் கிடைக்கிறது அல்லது சக்தியூட்டப்படுகிறது என்ற தத்துவத்தை இந்நூல் அழுத்தமான பதிவுகள் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT