நூல் அரங்கம்

இ மெயில் தமிழன்

30th Mar 2020 08:36 AM

ADVERTISEMENT

இ மெயில் தமிழன் - விஜய் ராணிமைந்தன்; பக்.128; ரூ.100; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; ) 044- 2434 2771.
இ மெயில் கண்டுபிடித்த சிவா அய்யாதுரையின் வாழ்க்கை வரலாறு இந்நூல். இளம் வயதில் மும்பையில் படித்த சிவா அய்யாதுரையின் ஏழாவது வயதில் (1970) அவருடய குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனில் குடிபெயர்ந்து அங்குள்ள பள்ளியில் படித்தார் சிவா அய்யாதுரை. பள்ளியில் படிக்கும்போதே கோடை விடுமுறையில் ஏழு வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1978 - இல் "யுனிவர்சிட்டி ஆஃப் டென்ஸ்ட்ரி அண்ட் மெடிஸின் ' நிறுவனத்தில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணியில் சேர்ந்தார். அப்போதுதான் இ மெயிலைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மேற்படிப்புக்காகச் சென்றார். அங்கு அவர் இ மெயிலைக் கண்டுபிடித்ததற்காகச் சிறப்பிக்கப்பட்டார். 
என்றாலும் அவர் இ மெயிலைக் கண்டுபிடிக்கவில்லை என்று பலர் கூறினார்கள். 
"இத்தகைய கண்டுபிடிப்பின் நாயகன் வெறும் பதினான்கே வயதான சிறுவன் என்றால் இவ்வுலகமே அவனைத் தன் தோள்மீது ஏற்றிக் கொண்டாடியிருக்கும். இந்நேரம் உலகின் பெரும்பான்மையான தபால்தலைகளில் அவன் முகம் வந்திருக்கும், அவன் ஆங்கிலேயனாக இருக்கும்பட்சத்தில். மாறாக கருப்புத் தோலுடைய இந்தியச் சிறுவன் ஒருவன்தான் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறான் என்பதை இவ்வுலகம் ஏற்க மறுக்கிறது' என்று சிவா அய்யாதுரை இதுகுறித்து வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். என்றாம் பல போராட்டங்களுக்குப் பிறகு 1982 இல்இ மெயில் கண்டு பிடித்ததற்காக காப்புரிமை பெற்றார். 
1985-86 ஆம் ஆண்டில் ஐஆர்ஐ என்ற நிறுவனத்தில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். 
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ECHO MAIL என்ற மெயில் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை உருவாக்கினார். 
இவ்வாறு சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பு, புதியனவற்றில் ஆர்வம், கண்டுபிடிப்பில் மோகம், தன் தாயிடம் அளவுக்கதிகமான அன்பு ஆகியவைதான் சிவா அய்யாதுரையை வெற்றிகரமான கண்டுபிடிப்பாளராக, மனிதராக ஆக்கியிருக்கிறது என்பதை இந்நூல் மிக அருமையாக விளக்குகிறது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT