நூல் அரங்கம்

எஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள்

16th Mar 2020 12:05 AM

ADVERTISEMENT

எஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள்- பொன்.செல்லமுத்து; பக். 448; ரூ.450; வைகுந்த் பதிப்பகம், 275, கணபதி நகர், நாகர்கோவில்-2; ) 04652-227268.
 நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ள 81 திரைப்படங்களின் முழு விவரங்கள் அடங்கிய ஆவணம் இந்நூல். எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர். 2 படங்கள் (ராஜா தேசிங்கு, காஞ்சித் தலைவன்), சிவாஜியுடன் 16 படங்கள், ஜெமினியுடன் 2 படங்கள் (குலவிளக்கு, வைராக்கியம்), விஜயகுமாரியுடன் 32 படங்கள் மற்றும் முத்துராமன், பிரேம் நஸீர் உடனும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முக்தா சீனிவாசன் போன்றவர்களின் முதல் பட நாயகனாக எஸ்.எஸ்.ஆர். நடித்துள்ளார். அவர் இயக்கி நடித்த படங்கள் மூன்று. அவர் துணைப் பாத்திரங்கள் ஏற்று நடித்த 30 திரைப்படங்கள், கதாநாயகனாக நடித்த 51 திரைப்படங்கள்,
 அவற்றின் கதைச் சுருக்கங்கள், அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், படத்தின் இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், படத்தில் இடம் பெற்ற பாடல்களின் விவரம், பாடல்களை எழுதிய கவிஞர்கள், பாடிய பின்னணிப் பாடகர்கள், படம் வெளியான தேதி, ஆண்டு, அதே ஆண்டில் வெளியான மற்ற நடிகர்களின் படங்கள் குறித்த ஒப்பீடு, அதன் வெற்றி, தோல்வி என அனைத்துத் தகவல்களையும் ஒன்று திரட்டித் தந்திருப்பதில் நூலாசிரியரின் கடின உழைப்பு பளிச்சிடுகிறது. திரை ரசிகர்களைக் கவரும் நூல்களில் ஒன்று.

ADVERTISEMENT
ADVERTISEMENT