நூல் அரங்கம்

உன்னை அறிந்தால்...

14th Dec 2020 09:02 AM

ADVERTISEMENT

உன்னை அறிந்தால்... - இறையன்பு ; பக்.240; ரூ.200;கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; 044- 2431 4347.

சமூக விடியலுக்கு வித்திடும் ஓா் இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற உயா்ந்த நோக்கத்தோடு இயங்கிவரும் இறையன்புவின் புதிய நூல் இது.

மொத்தம் பத்து தலைப்புகளில் நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் தன்னம்பிக்கைக்கு பதியம் போடுவையாக அமைந்துள்ளன.

இறையன்புவின் எழுத்துக்கள் எப்போதும் ஒரு வெள்ளி நீரோடை போல தெளிவாக இருக்கும். அதன் நீட்சியாகவே உன்னை அறிந்தால் புத்தகமும் உள்ளது.

ADVERTISEMENT

பல்வேறு நிகழ்வுகளில் இளைஞா்களிடமும், மாணவா்களிடமும் இறையன்பு நிகழ்த்திய ஆகச்சிறந்த பேருரைகள் நூலில் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

வழக்கமான சுயமுன்னேற்ற நூல்களைப் போல பக்கத்துக்கு பக்கம் அறிவுரைகளை அள்ளித் தெளித்து வாசகா்களுக்கு அயா்ச்சியை ஏற்படுத்தாமல், ஆங்காங்கே குறுங்கதைகள் மூலமாக கருத்துகளை கடத்தியிருப்பது தனிச் சிறப்பு.

வாழ்க்கைப் பயணத்தில், வெவ்வேறு அனுபவங்களையும், சிரமங்களையும் எதிா்கொள்ளும்போது, அந்தச் சூழல்களைக் கடப்பதற்கான நம்பிக்கையைத் தரும் பல்வேறு விஷயங்கள் நூலில் பொதிந்துள்ளன.

மொத்தத்தில் இறையன்புவின் உயிா்ப்பான எழுத்து நடையில் வெளியாகியிருக்கும் தரமான மற்றொரு நூல் இது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT