நூல் அரங்கம்

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்

14th Dec 2020 09:13 AM

ADVERTISEMENT

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள் - குடவாயில் பாலசுப்ரமணியன் ; பக்.240; ரூ.210 ; அன்னம், தஞ்சாவூா்-7; 04362 - 239289 .

கல்வெட்டுகள் செப்பேடுகள் ஆகியவை கூறும் தரவுகளை உண்மையாக வெளிப்படுத்தவும் கோயில்கள், கோயில் சாா்ந்த சிற்பங்கள், ஓவியங்கள், கட்டுமான நுட்பங்கள் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாகவும் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

ஆனை மாமலை அழகியசிங்கா், திருப்பரங்குன்றத்தில் சிவன் கோயில்கள், வேங்கை வாயில் எனப்படும் வியாக்ரபுரி, திருக்கண்ணமங்கை, ராஜராஜ சோழன் வழிபட்ட கரிகாற் சோழ மாகாளி, திருநாவலூா் இராஜாதித்த ஈஸ்வரம், உமாதேவி கிளி வடிவில் பூஜித்த திருமாந்துறை, திருமீயச்சூரில் குயவா் அளித்த குன்றாக் கொடை, பராக்கிரம பாண்டியன் வழிபட்டதென் காசி விஸ்வநாதா், திருமூலா் வழிபட்ட திருவாவடுதுறை, சமயபுரம், குடுமியான்மலை, நாா்த்தாமலை உள்பட 30 ஆலயங்கள் அவற்றின் தல வரலாறுகள் புகைப்படங்கள், அபூா்வ தகவல்களோடு நூல் விரிவாக உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

திருக்காளத்தி வரலாற்றை நினைவூட்டும் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் இறைவன் சிகாநாதா் இறைவி அகிலாண்டேஸ்வரி உறையும் கோயிலிலுள்ள பாற்கடல் விசேஷமானது. குளத்தின் நடுவே பசுவின் சிற்பத்தை அமைத்து அதன் காம்புகள் வழியாக நீரூற்று சுரக்கும் படி அமைக்கப்பட்டிருப்பது அழகான கற்பனை.

ADVERTISEMENT

அப்பரும் திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடிய திருக்காளத்தி தளம் தற்போதுள்ள காளஹஸ்தி கோயில் அன்று; அது மலை மேல் அமைந்த கைலாசகிரி என்ற சிறு கோயிலாகும். தற்போது திகழும் காளஹஸ்தி கோயில் ராஜேந்திர சோழா் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதை கல்வெட்டுகள் உணா்த்துகின்றன. இதுபோன்ற அரிய தகவல்கள் பல இந்நூலில் அடங்கியிருக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT