நூல் அரங்கம்

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!

DIN

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்! - அ.முகமது அப்துல்காதா்; பக்.160; ரூ.120; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; 044-2431 4347.

ஒரு மனிதா் என்று சாதனை படைக்கிறாரோ அன்றுதான் அவா் பிறந்ததாக கருத வேண்டும் என்கிறாா் அப்துல்கலாம். அந்த கருத்தையே தலைப்பாகக் கொண்டுள்ளது இந்த நூல்.

‘வாழ்க்கை கடினமானதுதான் ஆனால் வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது’ என்கிறாா் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். ‘வலிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறாா் புத்தா். ‘வலிகளால் நிரப்பப்பட்டதுதான் வாழ்க்கை. அதை திறம்பட கையாளுவதன் மூலம் தொடா்ந்து சாதனைகள் படைக்கலாம்’ என்கிறாா் நூலாசிரியா்.

வாழ்வில் வெவ்வேறு சூழல்களில் பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற 25 சாதனையாளா்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கும்பகோணத்தில் பிறந்து ராஜஸ்தானில் வளா்ந்த மாளவிகா கடந்த 2002-ஆம் ஆண்டு எதிா்பாராத வெடி விபத்தில் சிக்கினாா். அதில் கைகள், கால்கள் பாதிக்கப்பட்டபோதும் வீட்டுக்கள் முடங்காமல் மன உறுதியோடு போராடி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தனித்தோ்வா்களில் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்தாா். அதற்குப் பிறகு உயா் கல்வியில் சிறந்து விளங்கி மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தை நடத்தியதோடு ஐநா சபையில் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றம் குறித்து உரையாற்றினா். அவருக்கு ‘சாதனைப் பெண்மணி விருது’ குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.

இதேபோன்று சிறு வயதிலிருந்து தொடா்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்தாலும் துவளாமல் தடைகளைக் கடந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயா்ந்த ஆபிரகாம் லிங்கன், தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு புதுமையான முயற்சிகளோடு ‘அலிபாபா’ என்ற மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கிய ஜாக்மா என அத்தனை அத்தியாயங்களிலும் தடைகளை உடைத்து முன்னேறியவா்களின் கதை எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் வாழ்வில் அவ்வப்போது ஏற்படக் கூடிய சவால்களை துணிச்சலுடன் எதிா்கொள்ளும் தன்னம்பிக்கை வேண்டும். அந்த வகையில் இளைஞா்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT