நீரிழிவு நோய் இருந்தாலும்...

நீரிழிவு நோய் இருந்தாலும்... இயல்பான வாழ்க்கை  வாழலாம்- லயன் எம். சீனிவாசன்; பக்.160; ரூ.120;  கற்பகம் புத்தகாலயம், சென்னை-17;  044- 2431 4347.
நீரிழிவு நோய் இருந்தாலும்...

நீரிழிவு நோய் இருந்தாலும்... இயல்பான வாழ்க்கை  வாழலாம்- லயன் எம். சீனிவாசன்; பக்.160; ரூ.120;  கற்பகம் புத்தகாலயம், சென்னை-17;  044- 2431 4347.
அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளின் தலைமையகம் என்ற நிலையை இந்தியா எட்டிவிடும் என மருத்துவத்துறையின் புள்ளி
விவரங்கள் எச்சரித்துள்ளன.  "சர்க்கரை நோயைக்  குணப்படுத்த முடியாது. ஆனால் அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியும்'  எனும் நூலாசிரியரின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூல், சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கக்கூடிய விழிப்புணர்வு வழிகாட்டி எனலாம். குறிப்பாக, "சில கற்பனை கருத்துகளும், உண்மையும்' என்ற பகுதி புதுமையானது. 
சர்க்கரை நோய் வந்தால் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில், உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், மருந்து எடுத்துக்கொள்ளுதல் போன்ற ஏராளமான, எளிமையான வழிமுறைகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன.  ஆனால்,  சர்க்கரை நோயாளி
களைப் பாதிக்கக்கூடிய  இருதயம், சிறுநீரகம், கல்லீரல், விழிகள் போன்ற உடலின் முக்கிய பாகங்களைப் பாதுகாக்கும் எளிய உடல் பயிற்சி முறைகள், சர்க்கரை நோயாளிகள் எவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று  தவறாக நம்பிக்கொண்டிருக்கும் பழங்களானஆப்பிள், வாழை, மாம்பழம், அன்னாசி, விதையில்லாத பழ ரகங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பன போன்ற பல தகவல்கள்,  குறைவாக உண்பது, அதைச் சரியான நேரத்தில் உண்பது, முறையான உணவை உண்பது ஆகிய மூன்று குறிக்கோள்
களைக் கடைப்பிடித்தால்  சர்க்கரை நோயைக்  நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளமுடியும் என்பதை எளிய நடையில் ஆணித்தரமாக இந்த நூல் விளக்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com