பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள் - பதிப்பாசிரியர்:  சிற்பி பாலசுப்பிரமணியம்;  பக்.288; ரூ.260; சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044- 2431 1741. 
பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள் - பதிப்பாசிரியர்:  சிற்பி பாலசுப்பிரமணியம்;  பக்.288; ரூ.260; சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044- 2431 1741. 

தமிழகம் நன்கறிந்த படைப்பாளியான பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். 

பணம் சம்பாதித்து சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல்,  தனக்குப் பிடித்த பணிகளைச் செய்து  வாழ்ந்து முத்திரை பதித்து மறைந்தவர் பெரியசாமித்தூரன்.  கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே "பித்தன்' என்ற இதழை நடத்தியிருக்கிறார்.    பாரதியாரின் படைப்புகளை அவை வெளிவந்த ஆண்டு, மாதம், நாள் குறிப்புகளோடு 1953 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், உளவியல் நூல்கள்,  நாடகங்கள், குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்புகள் என படைப்பிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழில் முதன்முதலாக கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். 10 தொகுதிகளை வெளியிட்டார்.  

காந்தியடிகள் ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்காகச் சுற்றுப்பயணம் செய்தபோது பெரியசாமித்தூரன் பணியாற்றிய இராமகிருஷ்ணா வித்யாலயத்திற்கு வருகை தந்த போது நிகழ்ந்த சாதிப் பிரச்னைகளைச் சமாளித்தது,  பகத்சிங் தூக்கிலடப்பட்டதை அறிந்து மனம் வருந்தி கல்லூரிப் படிப்பின் இறுதித் தேர்வை எழுதாமல் போனது, ரூ.350 சம்பளத்தில் ஆசிரியப் பணி, கலைக்களஞ்சியம் உருவாக்கும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டு கடும் வறுமையில் உழன்றபோது,  ரூ.700 சம்பளம் வரக் கூடிய வானொலி நிலைய வேலையை கலைக்களஞ்சிய வேலைக்காக வேண்டாம் என்று உதறித் தள்ளியது என பெரியசாமித்தூரனின் வாழ்க்கை இந்நூலில்  பதிவாகியுள்ளது. வாசிப்பவர்களின் மனங்களிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com