ஆக்கப்படுவதே வாழ்க்கை

ஆக்கப்படுவதே வாழ்க்கை - பிரீத்தி ஷெனாய்; தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்; பக்.214; ரூ.235; ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை-33; ) 044- 2480 3091.
ஆக்கப்படுவதே வாழ்க்கை

ஆக்கப்படுவதே வாழ்க்கை - பிரீத்தி ஷெனாய்; தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்; பக்.214; ரூ.235; ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை-33; ) 044- 2480 3091.
 ஒரு சுயமுன்னேற்ற நூலைப் போன்ற தலைப்பைக் கொண்ட இந்நூல், உண்மையில் சுயமுன்னேற்ற நூல் அல்ல, நாவல்.
 கொச்சினில் உள்ள அங்கிதா என்ற கல்லூரி மாணவி தில்லி ஐஐடியில் படிக்கும் வைபவ் என்பவனிடம் காதல் வயப்படுகிறாள். செல்பேசி இல்லாத அக்காலத்தில் அவனுடன் தொலைபேசியில் பேசுவதே சாதனையாக இருக்கிறது.
 அங்கிதா பயின்ற கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் அவள் போட்டியிட்டு வெல்கிறாள். பிற கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அங்கிதாவை பிற கல்லூரியைச் சேர்ந்த அபி என்பவன் காதலிக்கிறான். பின்தங்கிய, மரபார்ந்த மதிப்பீடு
 களைக் கொண்டிருந்த குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அங்கிதாவுக்கு, கல்லூரி வாழ்க்கை புதிய வாழ்க்கையைக் காட்டுகிறது. தன்னுடன் பயிலும் பிற மாணவிகளின் எல்லைகளை மீறும்போக்கின் ஈர்ப்பில் சிறிது மதி மயங்கும் அங்கிதா, படிப்பில் பின்தங்கவில்லை. இளங்கலைப் படிப்பை முடித்த அவளுக்கு, எம்பிஏ பயில மும்பை கல்லூரியில் இடம் கிடைக்கிறது.
 படிப்பை முக்கியமாகக் கருதிய அங்கிதா, அபியின் காதலைப் பொருட்படுத்தாமல் மும்பை செல்கிறாள். அபி தற்கொலை செய்து கொள்கிறான். அங்கிதா மனதில் அது ஏற்படுத்திய பாதிப்பு அவளை மனநோயாளியாக்குகிறது. மிகவும் ஊக்கமுள்ளவளாகத் திகழ்ந்த அவள் தற்கொலை செய்து கொள்ள முயலும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறாள். மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக மனத்தளர்வுநிலையில் இருந்து விடுபட்டு, ஓவியம் வரைவது, படைப்பாற்றலுடன் எழுதுவது என தன்னை மாற்றிக் கொள்கிறாள்.
 இன்றைய இளம்தலைமுறையினரின் வாழ்க்கையை, மனோபாவங்களை, செயல்களை மிக அற்புதமாகச் சித்திரிக்கும் இந்நாவல், அவர்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. எத்தகைய வீழ்ச்சியிலிருந்தும் எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com