நூல் அரங்கம்

குரங்கு கை பூமாலை

15th Jul 2019 01:28 AM

ADVERTISEMENT

குரங்கு கை பூமாலை - ஈரோடு அறிவுக்கன்பன்; பக்.264; ரூ.270; காவ்யா, சென்னை-24; ) 044-2372 6882.
 சுற்றுச்சூழல் கேடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சுற்றுச்சூழல் கேடுகளுக்கான காரணங்களும், தீர்வுகளும் பலவிதமாகக் கூறப்படுகின்றன. இந்த நூல் சுற்றுச்சூழல் கெட்டுப் போனதிற்கான உண்மையான காரணங்களைச் சொல்கிறது.
 அதற்கு பல்வேறு சான்றுகளையும் எடுத்துக்காட்டுகிறது. "சர்க்கரை தொழிற்சாலை, சாராய தொழிற்சாலை, பெட்ரோலியம் தொழிற்சாலை, தோல் பக்குவப்படுத்தும் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை,துணிகளை உருவாக்கும் தொழிற்சாலை, வேதியல் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலை, பால் மற்றும் அதன் துணைப்பொருள் தொழிற்சாலை ஆகியவை வெளியேற்றும் கழிவுகள், நீரின் தூய்மையைக் கெடுப்பதோடு நீரில் வாழும் உயிரினங்களையும் கொன்றுவிடுகின்றன' என்று கூறும் நூலாசிரியர், தமிழகத்தில் உள்ள பல ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பற்றிய விவரங்களையும் எடுத்துக்காட்டுகிறார்.
 1984 - இல் நிகழ்ந்த போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நிகழ்ந்த விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள், கோலார் தங்கச் சுரங்கத்தில் பணிபுரிபவர்கள் சிலிகான், சிலிகான் டை ஆக்ûஸடு நச்சுக் கழிவினால் பாதிக்கப்படுதல், உலகம் முழுவதும் உள்ள அணுஉலைகளால் ஏற்படும் பாதிப்புகள், கூடங்குளம் அணுஉலைப் பாதிப்பு, நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள், உலக நாடுகள் பிறநாடுகளை ஆக்கிரமிக்க நடத்தும் போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்கள், உயிரியல்தொழில்நுட்ப ஆயுதங்கள், அணுகுண்டுகள், நெருப்பு ஆயுதங்கள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என விவரிக்கும் நூலாசிரியர், சுற்றுச்சூழலைக் கெடுத்து இந்த பூமியை மனிதன் வாழ முடியாத அளவுக்கு மாற்றுபவர்களை அடையாளம் காட்டுகிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிகளையும் கூறுகிறார்.
 சுற்றுச்சூழல் கேடு குறித்து "உண்மையான' விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT