சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

உலகத்துச் சிறந்த நாவல்கள்

DIN | Published: 14th January 2019 01:30 AM

உலகத்துச் சிறந்த நாவல்கள் (உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்) - க.நா.சுப்ரமண்யம்; பக்.368; ரூ.250; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 உலக மொழிகளில் வரும் அத்தனை இலக்கியப் படைப்புகளையும் மூலமொழிகளில் ஒரு வாசகனால் படித்துவிட முடியாது. அவனறிந்த மொழியில் நாவலின் மொழிபெயர்ப்பு கிடைத்தால் மட்டுமே படிப்பது சாத்தியம். அதை சாத்தியமாக்கியுள்ளார் தமிழ் எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம்.
 "உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ள பயன்படும்' என்ற வரிகளுடன் 15 உலகத்துச் சிறந்த நாவல்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
 நார்வேயைச் சேர்ந்த நட் ஹாம்ஸன் எழுதிய "நில வளம்', ருஷ்யாவைச் சேர்ந்த நிகோலை கோகால் எழுதிய "டாரஸ் பல்பா', அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்மேன் மெல்வில் எழுதிய "திமிங்கில வேட்டை', ஸ்பானிய மொழி நாவலான மைக்கல் டி.செர்வாண்டிஸ் எழுதிய "டான் க்விஜோட்', ருஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய் எழுதிய "அன்னா கரினீனா', இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய "டேவிட் காப்பர்ஃபீல்டு', ஸ்வீடனைச் சேர்ந்த ùஸல்மா லாகர்லெவ் எழுதிய "கெஸ்டாவின் கதை', ருஷ்யாவைச் சேர்ந்த ஃபெடார் டாஸ்டாவ்ஸ்கி எழுதிய "கரமஸாவ் சகோதரர்கள்', ஜெர்மனி தேசத்து தாமஸ் மான் எழுதிய "மந்திர மலை', இங்கிலாந்து தேசத்து ஸர் வால்டர் ஸ்காட் எழுதிய "ஐவன்ஹோ', ஜெர்மனி தேசத்து ஃபிரான்ஸ் காஃப்கா எழுதிய "விசாரணை', ஃபிரான்ஸ் தேசத்து ஹொனோர் டி பால்ஸாக் எழுதிய "கிழவன்', போலந்தைச் சேர்ந்த வ்ளடிஸ்லா ரோமாண்ட் எழுதிய "குடியானவர்கள்', இத்தாலி தேசத்து இக்னாஸியோ ஸிலோனே எழுதிய "முஸ்ஸோலினி ராஜ்யம்', பிரான்ஸ் தேசத்து ரொமேன் ரோலந்து எழுதிய "ழீன் கிறிஸ்தோஃப்' - ஆகிய உலக நாடுகளின் இலக்கியத்தரமான 15 நாவல்களின் கதைச் சுருக்கங்களை மட்டும் தராது, அவற்றின் சிறப்பு மற்றும் ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புகளோடும் அறிமுகப்படுத்தியுள்ளது மகத்தான சேவை.

More from the section

இலக்கியச் சங்கமம்
டிஜிட்டல் மாஃபியா
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்
நூறு பேர்
குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்