நூறு பேர்

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை - நூறு பேர்- மைக்கேல் ஹெச்.ஹார்ட்; தமிழில்: இரா.நடராசன், மோ.வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா, மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப்; பக்.672; ரூ.375
நூறு பேர்

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை - நூறு பேர்- மைக்கேல் ஹெச்.ஹார்ட்; தமிழில்: இரா.நடராசன், மோ.வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா, மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப்; பக்.672; ரூ.375; யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044 - 2834 3385.
 உலக அளவில் புதிய வரலாறு படைத்த நூறு பேரை வரிசைப்படுத்தி, அவரவர்களுக்குரிய இடத்தை அந்த வரிசையில் முன் பின்னாகக் கொடுத்து மதிப்பிட்டிருக்கும் நூல். முஹம்மத், ஐசக் நியூட்டன், ஏசு கிறிஸ்து, புத்தர் எனத் தொடங்கும் இந்த வரிசை ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், சார்லஸ் டார்வின், அலெக்சாண்டர் கிரகாம்பெல் , ஜார்ஜ் வாஷிங்டன், கார்ல்மார்க்ஸ், மாசேதுங், மார்ட்டின் லூதர் எனத் தொடர்ந்து, மகா வீரருடன் நிறைவடைகிறது. இந்த 100 பேரைத் தாண்டி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ஆபிரகாம் லிங்கன், பெஞ்சமின் ஃபிராங்க்லின் என்று இன்னும் 10 பேரையும் சேர்த்துக் கொள்கிறது.
 வரலாறு படைத்தோர் ஒவ்வொருவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகமும், அவர்களுடைய சிந்தனை, செயல்களால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய நூலாசிரியரின் கருத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வரிசைப்படுத்துதலில் நூலாசிரியரின் சார்புநிலையும், சிந்தனைகளும் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இதனை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூற முடியாது. எனினும், உலக அளவில் மனித குல வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களை அறிமுகம் செய்யும் நூல் என்ற அளவில் இந்த நூல் பயனுடையதே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com