நூல் அரங்கம்

டிஜிட்டல் மாஃபியா

DIN

டிஜிட்டல் மாஃபியா - நீங்கள் டிஜிட்டல் உலகின் சோதனை எலிகள்- வினோத்குமார் ஆறுமுகம்; பக்.132; ரூ.120; வி கேன் புக்ஸ்,57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர், சென்னை-17.
 இன்று எல்லாரும் பேஸ்புக், யூ டியூப், கூகுள், இணையதளங்களைப் பயன்படுத்துகிறோம். நெட் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங், வாடகைக் கார் புக்கிங் என்பது சாதாரணமாகிவிட்டது. ஒரு தனிமனிதன் ஒவ்வொருநாளும் என்ன செய்கிறான்? எங்கே போகிறான்? என்ன வாங்குகிறான்? யாரிடம் பேசுகிறான்? எந்தமாதிரியான பொழுதுபோக்குகளை விரும்புகிறான்? எதை விரும்பிச் சாப்பிடுகிறான்? என்ன மாதிரியான உடை உடுத்த விரும்புகிறான் என்று எல்லாமும் இந்த இணைய உலகில் பதிவு செய்யப்படுகிறது.
 அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் தனிமனிதரின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக, மறைமுகமாகத் தலையிடுகின்றன. தனிமனிதனின் விருப்பங்களைத் தெரிந்து கொண்டு, அவனைக் கவரும் வணிக விளம்பரங்களை அவனை நோக்கித் திருப்பிவிடுகின்றன. இவற்றுக்கு நிறைய உதாரணங்களை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். தேர்தலில் இந்த கட்சியை ஆதரியுங்கள் என்று மக்களை மறைமுகத் தூண்டிவிடும் அளவுக்கு டிஜிட்டல் உலகம் செல்வாக்குச் செலுத்துவதற்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியே ஓர் உதாரணம் என்கிறார். இந்த இணைய உலகச் சிறைக்குள் எல்லாரும் அடைபட்டுக் கிடக்கிறோம். இந்த இணைய உலகைப் பயன்படுத்திக் கொண்டு, அதே சமயம் அதில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படி? என்று இந்நூல் வழிகாட்டுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT