சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்

சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்

சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும் - ம.சுரேந்திரன்; பக்.112; ரூ.100 ; பாரதி புத்தகாலயம், சென்னை-18; 044 - 2433 2424.

சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும் - ம.சுரேந்திரன்; பக்.112; ரூ.100 ; பாரதி புத்தகாலயம், சென்னை-18; 044 - 2433 2424.
 கொந்தளிப்பும், போராட்டமும் மிகுந்த இந்த சமூக வாழ்க்கையில், நடைமுறை வாழ்வில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு, அதற்குத் தொடர்புடைய ஒரு சங்க இலக்கியப் பாடலை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
 "சங்ககால சைவ சாப்பாடு', "சங்ககால டாஸ்மாக்', "நரையைப் போக்கும் மருந்து எங்கே கிடைக்கும்?', " போரூர் ஏரியும் குடபுலவியனார் ஆலோசனையும்', "நுங்கம்பாக்கம் ஸ்வேதாவும் பெருங்கோப்பெண்டும்', "பறவைகளின் காதலன் ஆய் எயினன்' என்பன போன்ற கட்டுரைகளின் தலைப்புகளே நூலின் உள்ளடக்கத்தை ஓரளவுக்குப் புரிய வைத்துவிடுகின்றன. எனினும் இக்கட்டுரைகள் சங்க இலக்கியப் பாடல்களை, சம கால நிகழ்வுகளை வெறும் ரசனைக்குரிய தளத்தில் மேம்போக்காக ஆய்வு செய்து எழுதப்படவில்லை.
 "நரையைப் போக்கும் மருந்து எங்கே கிடைக்கும்?' கட்டுரை "யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்' என்ற பிசிராந்தையாரின் பாடலை விளக்குகிறது. "சுற்றுச்சூழலும் புன்னைமர அக்காவும்' என்ற கட்டுரை "விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி' என்ற நற்றிணைப் பாடலுடன் தொடர்புபடுத்திக் காட்டி, சங்கத் தமிழரின் வழிதோன்றலான நாமும் மரங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. சமகால மனிதனுக்குள் சங்க இலக்கியத்தை விதைக்கும் முயற்சி இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com