இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்

இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும் - ம.திருமலை; பக்.224; ரூ.220; செல்லப்பா பதிப்பகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-1.
இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்

இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும் - ம.திருமலை; பக்.224; ரூ.220; செல்லப்பா பதிப்பகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-1.
 ஒருவர் அல்லது ஒரு பொருள் தனிப்பட்டுத் துலக்கமாகத் தெரியாமலும் தக்க வெளிப்பாட்டில் இல்லாத முறையிலும் இருப்பது "இருண்மை'. இலக்கியப் படைப்பின் உள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தானது, முதல் வாசிப்பில் தெளிவாகப் புலப்படாத நிலையில்தான் அது இருண்மை எனப்பட்டது.
 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய அரசியல் நெருக்கடிகள் எதையும் வெளிப்படையாகக் கூற முடியாதபடி தடுத்தன. அப்போது படைப்பாளிகள் மறைபொருளாக, இரட்டைப் பொருள் கொண்ட உருவகநிலையில் எதையும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள் என கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிற காலங்களில் இருண்மையியல் தோன்றுவதை விளக்குகிறார்.
 அத்தகைய நெருக்கடிகள் இல்லாதநிலையிலும் நமது இலக்கியங்களில் குறிப்பாக, திருக்குறளில், முத்தொள்ளாயிரத்தில், சங்க இலக்கியங்களில், புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் எழுத்துகளில், ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. , மௌனி, நகுலன், ஆத்மாநாம் கவிதைகளில், சுந்தர ராமசாமியின் சிறுகதையில் பொருள் புலப்படாத அல்லது பல பொருள்களை உள்ளடக்கிய, சொல்லாமல் சொல்லப்பட்ட பல விஷயங்கள் எவ்விதம் காணப்படுகின்றன என்பதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இருண்மையியல் தொடர்பான தெளிவான புரிதலை ஏற்படுத்தும் நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com