நூல் அரங்கம்

கனவோடு நில்லாமல்

23rd Dec 2019 12:05 AM

ADVERTISEMENT

கனவோடு நில்லாமல்... - ஜெ. சதக்கத்துல்லாஹ்; பக்: 224; ரூ. 150; வானதி பதிப்பகம், சென்னை-17; ) 044-2434 2810.
 தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ள நூலாசிரியர்சதக்கத்துல்லாஹ் "கனவை நனைவாக்குங்கள்' என்று கூறி அதற்கான பலமடங்கு உந்து சக்தியை இந்த நூலின் மூலம் அளித்துள்ளார்.
 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் தந்தையை இழந்து, குடும்ப வறுமையிலும் பல தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி பள்ளி, கல்லூரி, வெளிநாடுகளில் மேற்படிப்பை முடித்து இன்று ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குநராக உயர்ந்துள்ளார் சதக்கத்துல்லாஹ்.
 மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் உயர்ந்த பதவிக்கு வரலாம் என்பதை நிரூபித்திருக்கிறார். அவரது தாயின் உழைப்பில் கம்பீரமாக உயர்ந்து, தனது சகோதரர்களின் முன்னேற்றத்திற்கு உதவிய அவரது வாழ்க்கை, மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் உரிய புத்தகமாக அமைந்துள்ளது.
 பொதுவாக இன்றைய தலைமுறையினர் ஒரு முறை தேர்வில் தோல்வியைக் கண்டாலே, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சூழலில், இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் தங்களது வாழ்வில் எத்தனை தோல்விகளைக் கண்டாலும், கல்வித் தரத்தை உயர்த்தி, வெற்றி ஒன்றையே இலக்காக வைத்து செயல்படுவார்கள் என்பது உறுதி. முதல் தலைமுறைப் பட்டதாரியான சதக்கத்துல்லாஹ்வின் இந்நூல், அனைத்து தலைமுறையினருக்குமான சுயமுன்னேற்ற புத்தகமாகும். இந்நூலுடன் வங்கி வேலைவாய்ப்புகள் குறித்த அவரது உரையாடல் அடங்கிய இலவச டிவிடியும் இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் அம்சமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT