நூல் அரங்கம்

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்

16th Dec 2019 12:43 AM

ADVERTISEMENT

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள் - அப்துல்காதர்; பக்.192; ரூ. 180; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை -17; ) 044 - 2834 3385.
 அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, கலைகள் போன்றவற்றைச் சொல்லும் சிலப்பதிகாரத்தில், இல்லறம், துறவறம், சமுதாய அறம், அரசியல் அறம் ஆகியவை எவ்வாறெல்லாம் இயல்பாகவே விரவிக் கிடக்கின்றன என்பதை புதிய நோக்குடன், பலவித கோணங்களில், விரிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்த ஆய்வு நூல்.
 அடையாளமற்ற அடையாளம், அறக்கோட்பாட்டு அமுதசுரபி, அகப்புற அற ஆவணம் உள்பட எட்டு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திருக்குறள், புறநானூறு உள்ளிட்டதமிழ் இலக்கியங்கள், பிற நாட்டு இலக்கியங்கள், அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள், புதுக்கவிதை, நிகழ்கால நாட்டு நடப்புகள் ஆகியவற்றின் மூலம் "அறக்கோட்பாடு' மிக எளிமையாகப் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. பிற சமய நூல்களின் கருத்துகளுடன் ஒப்பீடு செய்யும் நோக்கில் சிலப்பதிகாரத்தின் "அறம்' விளக்கப்பட்டுள்ளது புதிய சிந்தனைக்கு வழிவகுக்கிறது.
 சிலப்பதிகாரம் குறித்த ஆய்வு உலகில் தனித்தன்மையுடன் புத்தொளியைப் பாய்ச்சுகிறது இந்நூல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT