அதிசய சித்தர்கள்

அதிசய சித்தர்கள் - ஹனுமத்தாசன்; பக்.264; ரூ.250;  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், 9, பாஸ்கர் தெரு, நேரு நகர், சாலிகிராமம், சென்னை-93.
அதிசய சித்தர்கள்

அதிசய சித்தர்கள் - ஹனுமத்தாசன்; பக்.264; ரூ.250;  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், 9, பாஸ்கர் தெரு, நேரு நகர், சாலிகிராமம், சென்னை-93.

பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் துன்பப்படவே செய்கிறோம்.  இந்தத் துன்பங்களுக்குக் காரணம் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களே.  ஆனால் இந்த துன்பங்களில் இருந்து நாம் விடுபட  இறைவன் சில பரிகாரங்களைச் செய்ய வைக்கிறான்.  அந்தப் பரிகாரங்களின் வாயிலாக நமது பாவச்சுமை குறைகிறது.  எந்தப் பரிகாரத்தை எப்படி, எப்போது செய்வது என்று நமக்குச் சொல்லித் தருபவர்கள் சித்தர்கள்.  சித்தர்களின் தலைவரான அகத்தியர் தம்மை நாடி வந்த மக்களுக்கு ஜீவநாடி வாயிலாக வழிகாட்டி கருணை செய்கிறார் என்கிறார் நூலாசிரியர். 

சதுரகிரி மலை சித்தர்கள் வாழும் இடமாக இருக்கிறது. நிறைய சித்தர்கள் அங்கு தங்கி உயிர்காக்கும் மூலிகைகளை வளர்த்து மக்களுக்குச் சேவை செய்திருக்கிறார்கள். இந்நூலில் பல சித்தர்களைப் பற்றிய தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. "உலகமே அழிந்தாலும், பிரளயங்கள் ஏற்பட்டாலும், காடுகள்,மலைகள் மறைந்து போனாலும், தேவர்களும், சித்தர்களும் கூட காணாமல் போனாலும், அத்தனை பேர்களையும் தாண்டி, யுகங்களைக்  கடந்து நிற்கும் காகபுஜண்டர் சித்தர்'  பற்றி,  பிடிவாதம், கர்வம் அதிகமுள்ள திருமூலர் பற்றி,  சிவபெருமானுடன் மோதிய சுக்கிராச்சாரியார் பற்றி, பிரம்மாவிடம் அகத்தியர் சமரசம் செய்து கொண்ட சூழ்நிலை பற்றி இந்நூல் கதைவடிவில் சொல்லியிருக்கிறது. 

புராணங்கள்,  நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சுவையான நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com