வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

யூஏஏ எனும் ஆலமரம்

DIN | Published: 03rd December 2018 01:25 AM

யூஏஏ எனும் ஆலமரம் - டி.வி.ராதாகிருஷ்ணன்; பக்.112; ரூ.90; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
 "யுனைடெட் அமெக்சூர் ஆர்டிஸ்ட்' (யூஏஏ) என்ற நாடகக் குழுவை 1952 இல் ஒய்.ஜி.பார்த்தசாரதி தொடங்கினார். அவருடைய மகன் ஒய்.ஜி.மகேந்திரன் தனது 11 வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 26 ஆவது வயதில் 1976 - இல் நாடகங்களை இயக்கத் தொடங்கினார்.
 1996 -இல் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் ஒய்.ஜி.மதுவந்தி "கிராஃப்ட்ஸ் பத்து' என்ற நாடகத்தில் நடித்தார். இவ்வாறு மூன்று தலைமுறைகளாக நாடகப் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
 இந்நூல் யூஏஏ நாடகக் குழுவின் வரலாற்றை சுவைபடச் சொல்கிறது.
 இந்த நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்து அறிமுகமாகி அதன் பின்னர் திரைப்படங்களில் நடித்து அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பலரைப் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கின்றன.
 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சோ, நடிகை லட்சுமி, நடிகர் நாகேஷ், ராதாரவி, இயக்குநர் விசு உட்பட பலர் இந்த நாடகக் குழு நடத்திய நாடங்களில் நடித்திருக்கின்றனர்.
 யூஏஏ நடத்திய பல நாடகங்களைப் பற்றிய தகவல்கள், நாடகங்களை நடத்தும்போது ஏற்பட்ட பிரச்னைகள், அவற்றில் அறிமுகமானவர்களைப் பற்றிய விவரங்கள் என பல சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
 இந்த குழு நடத்திய "பெற்றால்தான் பிள்ளையா?' என்ற நாடகம் "பார் மகளே பார்' என்ற பெயரில் திரைப்படமானது; நாடகங்களைப் பார்த்து அவற்றைப் பாராட்டி ரஜினிகாந்த், பாக்யராஜ் முதலிய பிரபலங்கள் கடிதம் எழுதியது என யூஏஏ நாடகக் குழுவைப் பற்றிய எல்லாத் தகவல்களும் சிறப்பாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

More from the section

இலக்கியச் சங்கமம்
டிஜிட்டல் மாஃபியா
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்
நூறு பேர்
குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்