வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 5

DIN | Published: 03rd December 2018 01:26 AM

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 5 - ஓஷோ; தமிழில்: தியான் சித்தார்த்; பக்.648; ரூ.420; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 2682.
 தனிமனிதனை மையமாகக் கொண்டு உலகில் இருப்பனவற்றிற்கும் தனி மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய ஓஷோவின் பார்வைகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.
 தந்த்ரா என்பது தத்துவம் அல்ல. தத்துவம் மனம் சம்பந்தபட்டது. அதைப் புரிந்து கொள்வதற்கு மொழி மட்டுமே போதுமானது. தந்த்ரா என்பது வழிமுறை. ஒன்றைச் செய்வதற்கான தொழில்நுட்பம். அது ஒரு விஞ்ஞானம். தந்த்ரா நடைமுறையுடன் தொடர்புடையது என விளக்கும் நூலாசிரியர், இந்த நடைமுறை எப்படி மனிதனின் மனம், உடல், சிந்தனை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதையும் விளக்குகிறார்.
 உலகத்தை மாற்ற வேண்டும் என்று தனிமனிதன் நினைக்க வேண்டியதில்லை. தனிமனிதன் உலகத்தை மாற்ற நினைப்பது ஒரு கற்பனை உலகை உருவாக்கி அதனுள் அவன் புகுவதாகும்.
 "நீ செய்யக் கூடியதெல்லாம் வெறுமனே உன்னை மாற்றிக் கொள்வது மட்டுமேயாகும். நீ இந்த உலகத்தை மாற்றிவிட முடியாது. நீ மாற்ற முயற்சிக்கையில் அதிக குளறுபடிகளை உருவாக்குவாய்'' என்கிறார் ஓஷோ. எனவே உலகத்தை அதனிடமே விட்டுவிடச் சொல்கிறார்.
 ஒரு மனிதன் அவன் உள்மெüனத்தை, உள் ஆனந்தத்தை, உள் ஒளியை அடைந்தால் அதுவே உலகத்திற்கு செய்யும் பெரிய உதவி என்கிறார். தனிமனிதன் உலகநடைமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.
 
 
 

More from the section

இலக்கியச் சங்கமம்
டிஜிட்டல் மாஃபியா
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்
நூறு பேர்
குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்