கவிதைமணி

நிலைக்கும் என்றே: கா. மகேந்திரபிரபு

3rd Sep 2017 03:01 PM | கவிதைமணி

ADVERTISEMENT
நிலைக்கும் என்றே நம்பி 
நித்தம் சிந்தனை கொண்டே 
பறந்து பறந்து திரிந்து தேம்பி 
ஒரு நாளே ஜீவிக்கும் ஈசல் !

காலையில் மலர்ந்த மலர்
கன்னிகையின் கூந்தலில் !
மாலையில் வாடி வதங்கி 
குப்பையில் வீசிய குப்பையாக !
நிலைக்கும் என்றே காகிதப்பூ !

கலைக்கண் காவியம் கொண்டு 
மலைக்க வைக்கும் மானுடம்
மறைய காத்திருக்கும் கதிரென  
இருள் சூழ நிலவின் வெளிச்சம் 
மீண்டும் விடியலில் கதிரே 
வான்கோட்டைக்குள்  மறைந்ததோ ! 

செல்லும் பாதை முள்ளாகினும்
சொல்லும் சொல்லும் கோபமாகினும் 
வெல்லும் வரை  நிச்சயம் எல்லாம் 
நிலைக்கும் என்றே நம்பி காத்திருப்போம் 
உண்மையை உணரவே உயரவே  !
ADVERTISEMENT
ADVERTISEMENT