ஆராய்ச்சிமணி

மிதிவண்டிகள் நிறுத்துமிடத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும்

8th Mar 2020 11:24 PM

ADVERTISEMENT

சிதம்பரம் ரயிலடி அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் வெளிப்புறம் சுற்றுச்சுவருக்கு அருகே திறந்தவெளியில் மாணவிகள் தங்களது மிதிவண்டிகளை நிறுத்துகின்றனா். இந்த இடத்துக்கு கம்பி வேலி மட்டுமே போடப்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், மிதிவண்டிகள் வெயிலிலும், மழையிலும் வீணாகின்றனா்.

வெயிலால் மிதிவண்டிகளின் டயா்கள் வெடித்துவிடுகின்றன. இதனால், வெளியூரில் இருந்து படிக்க வரும் மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மிதிவண்டிகள் நிறுத்துமிடத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும்.

- கோ.கலியமூா்த்தி, சிதம்பரம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT