ஆராய்ச்சிமணி

இயங்காத சிக்னலால் பொதுமக்கள் அவதி..!

4th Nov 2019 03:12 AM

ADVERTISEMENT

சென்னை அடையாறு மலர் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் அமைக்கப்பட்டது. போக்குவரத்துக் காவலர் ஒருவரும் இங்கு நிறுத்தப்பட்டிருந்தார். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடந்து வந்தனர். அடையாறிலிருந்து மயிலாப்பூர் செல்லும் முக்கியமான சாலை அடையாறு பிரிட்ஜ் சாலை. இப்பகுதியில்  ஏராளமான குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. இச்சாலையை தினமும் ஆயிரக்கணக்கானோர் கடந்து சென்று வந்த நிலையில், சிக்னல் பழுதடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. போக்குவரத்துக் காவலரும் வருவதில்லை. எனவே வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன்கருதி, இந்த சிக்னலை தாமதமின்றி சீரமைப்பதுடன், காவலர் ஒருவரையும்  நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-என்.தட்சிணாமூர்த்தி, அடையாறு.

ADVERTISEMENT
ADVERTISEMENT