ஆராய்ச்சிமணி

சுரங்கப் பாதை சந்திப்பில் தேவை காவலர் பணி

4th Mar 2019 04:02 AM

ADVERTISEMENT


சென்னை, ஹாரிங்டன் சாலையில் ரயில் வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பில், பச்சையப்பன் கல்லூரியில் இருந்து வரும் வாகனங்கள் சுரங்கப்பாதையின் மேற்புறம் சுற்றி வந்து, சூளைமேடு நெடுஞ்சாலையை நோக்கிச் செல்ல முடியும். மறுபுறத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், நமசிவாயபுரம் பாலத்தில் இருந்து நேராக உள்ள சிறிய சந்தில் நுழைந்து ஹாரிங்டன் சாலைக்கு வருகின்றன. சிறிய சந்து என்பதால் ஒரு வழிப் பாதையாக்கப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பில் போக்குவரத்து காவலர் நிற்காததால், பச்சையப்பன் கல்லூரியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தவறான வழியில் வந்து இந்தச் சந்தில் நுழைந்து விடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலையும் அடிக்கடி சேதமடைந்து விடுகிறது. எனவே, இந்தச் சந்திப்பில், முழு நேரமும்  போக்குவரத்து காவலரை பணியமர்த்தி, தவறான வழியில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எ.பத்மநாபன், ஷெனாய்நகர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT