மடிப்பாக்கம் ராம் நகர் (தெற்கு) 6-ஆவது குறுக்குத்தெருவும் 12-ஆவது பிரதான சாலையும் சந்திக்கும் இடத்தில் (சிருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்) எப்போதும் தண்ணீர் தேங்கியே இருக்கிறது. இதனால் அருகிலுள்ள வீடுகள், அடுக்கு மாடிகளில் குடியிருப்போர் அவதிக்குள்ளாகின்றனர். அத்துடன் அடிக்கடி இப்பகுதிகளில் உள்ளோர் நோய்வாய்ப்படுகின்றனர். இந்த இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேங்கும் நீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கி.வெங்கட்ரமணி, சென்னை-91.