ஆராய்ச்சிமணி

புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா?

16th Dec 2019 03:24 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 7-இல், வார்டு 85-க்கு உட்பட்ட கோவிந்தராஜுலு கார்டனில் உள்ள முதல் மூன்று தெருக்களில் வசிக்கும் மக்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அம்பத்தூர் நகராட்சியிடம் புதை சாக்கடை திட்டத்தை அமைப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், அந்தத் திட்டத்திற்கான எந்தப் பணியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகளும், ஓர் ஏற்றுமதி நிறுவனமும் உள்ளன. புதை சாக்கடை இல்லாததால், இப்பகுதியில் சேரும் கழிவுநீரை அகற்ற 15 நாள்களுக்கு ஒருமுறை கழிவுநீரகற்றும் ஊர்தி பெரும் செலவில் வரவழைக்கப்படுகிறது. எனவே, புதை சாக்கடை திட்டத்தை இப்போதாவது தொடங்க பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தி.குணசீலன், அம்பத்தூர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT