ஆராய்ச்சிமணி

குடிநீர்ப் பிரச்னை தீருமா?

22nd Oct 2018 03:28 AM

ADVERTISEMENT

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, பொன்னுசாமி தெருவில்  கைப் பம்புகளில் மெட்ரோ குடிநீர் வரவில்லை. அகலம் குறைந்த தெரு என்பதால் இங்கு குடிநீர் லாரிகளும்  வரமுடியாததால் இப்பகுதி வாசிகள் பிரதான சாலைக்கு காலி குடங்களுடன் சென்று  தண்ணீர் பிடித்து வரவேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி ஆண்களும், பெண்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சுங்கச் சாவடியில் இருந்து காசிமேடு, ராயபுரம் வழியாக ஸ்டான்லி மருத்துவமனை செல்ல மாநகரப் பேருந்து சேவை இல்லை. இப்பகுதி வழியாக மினி பேருந்துகளை இயக்கினால் பொது மக்களுக்கு பேருதவியாக இருக்கும். போக்குவரத்துத் துறையினர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
-எஸ்.எஸ். சுந்தரம், சென்னை-81

ADVERTISEMENT
ADVERTISEMENT