நோட்டா (NOTA) - 49-O வாக்கு என்றால் என்ன?

நோட்டா வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ளவே பயன்படும். இதை வைத்து கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்துக் கொள்ளலாம்.
நோட்டா (NOTA) - 49-O வாக்கு என்றால் என்ன?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 128ன் படி வாக்களிக்க இரகசிய பராமரிப்பு என்று ஒரு தனிப்பிரிவு உள்ளது. அதன்படி முந்தைய காலங்களில் தமிழக மாநில தேர்தல் துறை 49 - (O) விதியின்படி வாக்குச்சாவடி அதிகாரியிடம் சென்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து அதற்கான படிவம் (எண் 17 -A ) கேட்டு வாங்கி பூர்த்தி செய்து அதில் கைவிரல் ரேகை அல்லது கையெழுத்துப் போட்டு பிறகு ''வாக்களிக்க மறுத்துவிட்டனர்'' என்ற பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.

அரசியல் கட்சியினரும் உள்ளூர் அதிகார வர்க்கமும் விடுவார்களா? நம் எண்ணத்தை கெடுத்து மூளைச்சலவை செய்து நமது விருப்பத்தையும் அடிமையாக்கிவிடுகின்றனர். அதனால் இரகசியக்கொள்கை மீறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது ''நோட்டா'' பட்டன் முறை அமல்படுத்தியதால் வாக்களிப்பதற்கான இரகசியக் கொள்கை முழுமையாக காப்பாற்றப்பட்டு உள்ளது.

விதி 49-O

தேர்தல் நடத்தை விதிகள், 1961 ன் கீழ் அமைந்துள்ள ஓர் விதியாகும். இது ஓர் ஏற்புடை வாக்காளர் தனது வாக்குச்சீட்டைப் பதிய விரும்பாது தமது செயலை பதிய விரும்பும்போது செய்யவேண்டுவனவற்றை விளக்குகிறது. இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றல்களையும் தடுப்பதாகும்.

49-O. வாக்காளர் வாக்களிக்க விரும்பாதபோது.-ஓர் வாக்காளர், தனது தேர்தல் பட்டியல் எண் படிவம்-17A வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்டபின்னர், விதி 49L துணைவிதி (1)இல் கண்டுள்ளபடி கையொப்பமோ கைநாட்டோ இட்டபிறகு, தனது வாக்கை இட விரும்பாது போனால், இது குறித்தான குறிப்பை, படிவம் 17A பதிவேட்டில் உரிய இடத்தில் வாக்குச்சாவடி அதிகாரியால் பதிவதுடன் அந்த வாக்காளரின் கையொப்பமோ கைநாட்டோ அந்தக் குறிப்பிற்கு எதிராகப் பெறப்படவேண்டும்.

நோட்டா (None of the Above - NOTA)

அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பட்டனை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, இப்பொத்தான் வாக்கு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் இந்தப் பொத்தானானது ஆகக் கடைசியில் கீழே அமைந்திருக்கும்.

நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது.தமிழகத்தில் முதன்முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 2014இல் இந்தியாவில் நடைபெற்ற இந்தியாவின் 16வது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 % (59,97,054) நோட்டா வாக்குகள் பதிவாகியது.

நோட்டா என்பது வேட்பாளர்கள் யாரையும் வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்க பயன்படும் வாய்ப்பாகும். இந்த தேர்வை வாக்கு பாட்டிலில் சேர்க்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டிடம் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி கடந்த 2013-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நோட்டா வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் வேட்பாளர் பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்றிருக்கும்....

நோட்டா என்றால் என்ன?

உச்ச நீதிமன்றம் 2013 செப்டம்பர்-27 தேதி வாக்காளர்களுக்கு மேலுள்ள வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்க நோட்டாவை தேர்வு செய்ய வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கூறி. வாக்களிக்கும் தாள் மற்றும் இயந்திரத்திலும் நோட்டாவை சேர்க்க உத்தரவிட்டது.

நோட்டா அளிப்பது எப்படி?

ஓட்டளிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்கள் பட்டியலின் கடைசியில் வாக்கு சீட்டு மேல் "X" இட்டுள்ளது போல ஓர் சின்னம் இருக்கும். அதை அழுத்த வேண்டும். இந்த ஓட்டை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் நீங்கள் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

 முதன் முதலில் எப்போது நோட்டா அமலாக்கம் ஆனது?

சட்டசபை தேர்தலில் தான் முதன் முதலில் நோட்டா சேர்க்கப்பட்டது. முதலில் இதன் எண்ணிக்கை குறைவாக தான் பதிவானது.

சத்தீஸ்கர்-ல் 3.56 லட்சம்

டெல்லியில் 50,000

மத்திய பிரதேசத்தில் 5.9 லட்சம் மற்றும்

ராஜஸ்தான்-ல் 5.67 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நோட்டாவின் வித்தியாசம் என்ன?

ஓர் சீனியர் தேர்தல் கமிஷன் அதிகாரி, "நோட்டா வெறும் கணக்குக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். அதிகளவில் நோட்டா பதிவானாலும் அதற்கு அடுத்து எந்த வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளாரோ அவர் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படும் என" கூறியுள்ளார்.

நோட்டாவிற்கு ஏன் மதிப்பில்லை?

நோட்டா வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ளவே பயன்படும். இதை வைத்து கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்துக் கொள்ளலாம்.

  நோட்டாவிற்கு ஏன் மதிப்பில்லை?

மேலும், இந்திய சட்டப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்தரத்தின் கீழ், வேட்பாளர்களை பிடிக்கவில்லை எனில், வாக்காளர்கள் அதை வெளிபடுத்த அவர்களுக்கான ஓர் வாய்ப்பாக நோட்டா செயற்படும்.

  நோட்டா உள்ள மற்ற நாடுகள்

கொலம்பியா, உக்ரைன், பிரேசில், பங்களாதேஷ், பின்லாந்த், ஸ்பெயின், ஸ்வீடன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் நோட்டா வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com