திங்கள்கிழமை 22 ஜூலை 2019

“வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2016” இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 25th December 2018 11:44 AM

 

 

வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?


பல்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதிகளுக்கு இந்தியா வாடகைத் தாய்களின் இருப்பிடமாக உருவாகி இருப்பதுடன், பண்புநெறியற்ற நடைமுறைகள், வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுதல், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைகளை கைவிடுதல் மற்றும் மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இடைத்தரகர்களின் மோசடிகள் போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகின்றன.

கடந்த சில வருடங்களாக, பல்வேறு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இந்தியாவில் உள்ள வணிகரீதியான வாடகைத் தாய் அமர்த்துவது குறித்து பரவலாக கண்டனம் தெரிவிக்கப்படுவதோடு, வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அமர்த்துவதை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் முக்கியத்துவம் அளித்து தெரிவித்து வருகின்றன. இந்திய சட்ட ஆணையத்தின் 228வது அறிக்கையிலும், வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தேவைப்படும் இந்திய தம்பதிகளுக்கு பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


இந்த மசோதா, தேசிய அளவில் தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவில், மாநில வாடகைத் தாய் வாரியங்கள் மற்றும் தக்க அமைப்புகளை ஏற்படுத்தி, இந்தியாவில் வாடகைத் தாய் பயன்படுத்துவதை ஒழுங்குப்படுத்தும்.


இதன் மூலம் பண்புநெறி சார்ந்த வாடகைத்தாய் அமர்த்த விரும்பும் திருமணமாகி குழந்தையற்ற அனைத்து தம்பதிகளும் பயனடைவார்கள். மேலும், வாடகைத் தாய்கள் மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்த மசோதா ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.


நாடாளுமன்ற மக்களவையில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பான மசோதா நேற்று நிறைவேறியது. இந்நிலையில் வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்று தற்போது பார்ப்போம்.....

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா 2016 (Surrogacy (Regulation) Bill 2016 Bill No. 257 of 2016) சட்டமணி

More from the section

தேர்தல் ஸ்பெஷல்-5 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைகள் எவ்வளவு?
தேர்தல் ஸ்பெஷல்- 4 வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள், அவசியம் கவனிக்க வேண்டிய விதிகள்....
தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?