செய்திகள்

வருமானம் பன்மடங்கு உயரப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

செய்தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். வருமானம் சீராகவே இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகளும், சஞ்சலங்களும் தீரும். வியாபாரிகள் வியாபாரத்தை நல்ல நிலைக்குக் கொண்டு செல்வார்கள். விவசாயிகளுக்கு பால் வியாபாரம் மிகுந்த லாபத்தை ஈட்டித் தரும். 

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாகப் பழகவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் நண்பர்களால் சிறு தொந்தரவுக்கு ஆளாகுவார்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 13,14.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

புதிய முயற்சிகளில் துணிவுடன் ஈடுபடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். 

பூர்விக சொத்துகளில் நிலவிய பிரச்னைகள் தீரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.  வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.  விவசாயிகள் தானிய உற்பத்தியில் மகிழ்ச்சி அடைவார்கள்.  

அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். கலைத்துறையினர் ரசிகர்களைக் கௌரவப்படுத்துவார்கள்.  பெண்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.  மாணவர்கள் பெற்றோர் பேச்சை கேட்பார்கள்.

சந்திராஷ்டமம் -மார்ச் 15,16.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வரவு சீராக இருந்தாலும் அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். பங்குச்சந்தையில் லாபம் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த முயற்சி வெற்றியில் முடியும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பார்கள்.  விவசாயிகளின் பொருளாதாரம் மேன்மையடையும்.  

அரசியல்வாதிகள் யோசித்து செயல்பட்டால் நன்மையடையலாம். கலைத்துறையினர் ரசிகர்களிடம் இணக்கமாக இருக்கவும்.  பெண்கள் கவனமாக இருக்கவும். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.  உடனிருப்போரின் ஆதரவு கிடைக்கும்.  வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்குப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். 

விவசாயிகளுக்குப் புதிய குத்தகைகள் தேடி வரும். அரசியல்வாதிகள் சாதுர்யமாக நடப்பார்கள். கலைத்துறையினருக்கு வருமானம் சீராக இருக்கும்.

பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் தியானத்தை மேற்கொள்வார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பேச்சினால் அனைவரையும் கவருவீர்கள். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உயர்ந்தோரின் நட்பால் மகிழ்ச்சி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மாற்றத்தை விரும்பி ஏற்பீர்கள்.  வியாபாரிகளுக்கு கடன் சுமை குறையும். 

விவசாயிகளுக்கு கண்ணியமிக்க கூட்டாளிகளால் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் ரகசியம் காப்பது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்ப முன்னேற்றம் உயரும். உடனிருப்போருடன் ஒற்றுமை பலப்படும். சுப காரிய பேச்சுகள் முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் மிகுந்த கவனத்தோடு பேசுவார்கள். 

வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். விவசாயிகளுக்கு கொள்முதலில் இருந்த மந்த நிலை மாறும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

கலைத்துறையினர் உணர்ச்சி வசப்பட வேண்டாம். பெண்கள் குழந்தைகளை நன்கு வளர்ப்பார்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பெற்றோரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உடன்பணிபுரிவோரை அரவணைத்துச் செல்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  வியாபாரிகள் கடையில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வார்கள்.  விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளையும் தங்கள் வசப்படுத்துவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்துவார்கள். மாணவர்கள் போட்டிகளில் பரிசு பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் உயரும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைச் சந்திப்பீர்கள். உடல்நலம், மனவளம் சீராகும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.  

வியாபாரிகள் புதியவர்களின் கூட்டு முயற்சியில் வெற்றியைக் காண்பீர்கள். விவசாயிகள் உடனிருப்போருக்கு உதவியாக இருப்பார்கள்.  அரசியல்வாதிகள் புதிய சொத்துகளை வாங்குவார்கள். 

கலைத்துறையினருக்கு பல வழிகளிலும் வருவாய் உயரும்.  பெண்களுக்கு உறவினர் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிநாடு செல்ல ஆயத்தமாவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் பிரச்னைகளை முறியடிப்பீர்கள். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவில் இழுபறியான சூழ்நிலை மறையும். 

உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரிகள் கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.

விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். 

பெண்களுக்கு அனுகூலமான மாற்றங்கள் வரும். மாணவர்களுக்கு பொறுமையும் நிதானமும் அவசியம்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். உறவினர்களிடமிருந்த மனக் கசப்புகள் நீங்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு வாக்கு கொடுக்க வேண்டாம். வியாபாரிகள்  வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகளின் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.  அரசியல்வாதிகளுக்கு ஆரோக்கியம் சீராக இருக்கும். 

கலைத்துறையினர் தனித்திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்துவார்கள். மாணவர்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் வெற்றி பெறுவீர்கள். தடைகற்களைப் படிகற்களாக மாற்றிக் கொள்வீர்கள். மனதுக்கினிய செய்திகள் வந்து சேரும். வரவேண்டிய பணம் வந்து சேரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சில பயணங்களால் அனுபவம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழில்ரீதியில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  விவசாயிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.  

அரசியல்வாதிகளுக்கு இழுபறிகள் அகலும்.  கலைத்துறையினருக்கு வரவுமேம்படும்.  பெண்களுக்கு உடன் பிறந்தோரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்வார்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 10.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மனக் குழப்பங்கள் அகலும். தொழிலில் அகலக்கால் வைக்காதீர்கள். தகுதியானவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் நேர்மையாகப் பணியாற்றுவார்கள். வியாபாரத்தில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் புதிய பயணங்களைச் செய்து கட்சிப் பணியாற்றுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். மாணவர்கள் கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - மார்ச் 11,12.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT