செய்திகள்

போர், தொற்றுநோய்களை வெல்ல காவடி யாத்திரை!

தினமணி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பிப்ரவரி 5ஆம் தேதி திருமுருகாற்றுப் படை அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு தைப்பூசம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தை, உலகம் முழுவதும் இருக்கும் இந்து மக்கள் தைப்பூசம் திருவிழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். அதுபோல, அமெரிக்காவில் வாழும் இந்து மக்களும் தைப்பூசம் திருவிழாவை காவடிகள் எடுத்து வெகுச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற தைப்பூசம் திருவிழாவில், ஏராளமான அமெரிக்க வாழ் இந்து மக்கள் காவடி, பால் காவடிகளை சுமந்தபடி முருகன் கோயிலை நோக்கி காவடி யாத்திரை சென்றனர். இவ்விழாவில், கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள முருகன் கோயிலை நோக்கி 300க்கும் மேற்பட்டோர் காவடி சுமந்து சென்று, முருகன் கோயிலில் சமர்ப்பித்தனர்.

நாட்டில் நல்லிணக்கம் தழைக்க வேண்டி இந்த காவடி எடுத்துச் செல்லப்படுகிறது. பால் காவடிகள் முருகன் காலடியில் பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாக காவடியில் பங்கேற்ற பக்தர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருமூலரின் திருமந்திரம் படிக்கும் குழு மற்றும் கந்த சஷ்டி பாராயண குழுக்களை உருவாக்கி தொடர்ந்து ஆன்மிகம் தழைக்க முன்முயற்சிகளை எடுத்து வருகிறது திருமுருகாற்றுப்படை அமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT