செய்திகள்

எதையும் சமாளிக்கும் தைரியம் உண்டாகும் கன்னிக்கு: உங்க ராசிக்கு? வாரப் பலன்கள்

தினமணி

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எதிர்பார்ப்பு நிறைவேறும். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். விவேகத்துடன் நடப்பீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிப் பளு குறையும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்துகொள்வார்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் விஷயங்கள் நல்ல முறையிலேயே நடக்கும்.

அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் கட்சிப் பணியாற்றுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் குருமார்களைச் சந்தித்து ஆசி பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். வருவாய் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அன்போடு நடப்பார்கள்.

வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் மேன்மையைக் காண்பார்கள். விவசாயிகள் நன்கு உழைத்து நல்ல பலன்களை அடைவார்கள். அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் சாதகமாக நடந்துகொள்ளும்.

கலைத்துறையினர் ரசிகர்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

விடாமுயற்சிகள் வெற்றி பெறும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவில் தடை ஏற்படாது. வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் லாபம் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவிகளை ஏற்று திறம்பட செயல்படுவார்கள்.

கலைத்துறையினர் அதிர்ஷ்டகரமான திருப்பங்களைக் காண்பீர்கள். பெண்கள் யோகா, தியானத்தைக் கற்றுகொள்வீர்கள். மாணவர்கள் உழைத்தால்தான் எதிர்பாராத மதிப்பெண்களைப் பெற முடியும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

திட்டமிட்டு காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.  புதிய நட்பு கிடைக்கும். பொருளாதார நிலைமை சீரடையும்.  உடன்பிறந்தோருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எச்சரிக்கையுடனும் இருக்கவும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வார்கள். விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர் விருது பெறும் வாய்ப்பு உண்டாகும்.  பெண்கள் பெற்றோரிடம் அனுசரித்து நடந்துகொள்வார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

புகழும், அந்தஸ்தும் உயரும். தடைபட்ட பண வரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கூடத் தொடங்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்திலிருந்த பிரச்னைகள் தீரும்.  

வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணைக்கமாகப் பழகுவார்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவார்கள்.  அரசியல்வாதிகள் மேலிடத்தில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

கலைத்துறையினர் முக்கிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்களுக்கு நல்லது, கெட்டது இரண்டும் கலந்தே வரும். மாணவர்களுக்குத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

எதையும் சமாளிக்கக் கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். சுபகாரியங்கள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களின் புத்திசாலித்தனத்தை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய இலக்குகளை எட்டுவார்கள். விவசாயிகளுக்கு குத்தகைளில் நிறைய லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவோடு புதிய சாதனைகளைச் செய்வார்கள். கலைத்துறையினர் லாபகரமான பயணம் மேற்கொள்வார்கள்.

பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவர்களுக்கு புதியவர்கள் நட்பால் நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பயணங்களில் அனுபவம் அதிகரிக்கும். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து முன்னேற்றம் காண்பார்கள்.  விவசாயிகள் ரகசிய செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் பெறுவார்கள். விவசாயிகள் கால்நடைகளுக்குச் செலவு செய்ய நேரிடும்.  அரசியல்வாதிகளுக்கு மறைமுக உதவிகள் கிடைக்கும். 

பெண்கள் புதிய பொருள்களை வாங்குவார்கள். மாணவர்கள் தவறான நோக்கத்தைப் புரிந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

விட்டு சென்ற காரியங்களையும் முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.  எதிர்ப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளைச் செய்து முடிப்பார்கள். வியாபாரிகளுக்கு பண வரவில் தடை இருக்காது.

விவசாயிகளுக்கு நீர்ப் பாசனத்துக்காக மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்கும். அரசியல்வாதிகள் போராட்டங்களால் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு இழுபறியான வழக்கு பிரச்னை சாதகமாக முடியும். பெண்கள் எச்சரிக்கையுடன் பேசவும். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறி உண்டாகும். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள்.

பெண்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அடித்தளமிடுவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைக் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். தர்ம காரியங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் தேடி வருவார்கள்.  சொத்துகளை வாங்க முயற்சிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பிரச்னைகள் தோன்றி மறையும். வியாபாரிகள் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்வார்கள். விவசாயிகள் கவனமாகப் பயிர் செய்யவும். 

அரசியல்வாதிகள் எதிரிகளின் நடவடிக்கைகளைக் கவனித்து வரவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

பெண்கள் வருவாய் உயரக் காண்பார்கள். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 23,24.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வசதி வாய்ப்புகள் பெருகும். உறவினர்களிடமும், உடன்பிறந்தோரிடமும் ஒற்றுமை ஏற்படும்.  பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பான அணுகு முறையால் மகிழ்விப்பார்கள். வியாபாரிகள் எதிர்ப்புகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் கால்நடைகளால் வருவாய் உயரக் காண்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைத்துறையினர் உயர்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள்.  மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வார்கள்.

சந்திராஷ்டமம் - 25,26,27.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பழைய கடன்கள் வசூலாகும். புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவுடன் பணிகளை முடிப்பார்கள். வியாபாரிகள் புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். 

விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும்.  அரசியல்வாதிகளின் கட்சித் தலைமையிடம் நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரின் புதிய முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும்.

பெண்களுக்குப் பேச்சில் கவனம் தேவை. மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் இருக்கவும்.

சந்திராஷ்டமம் - 28,29.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT