செய்திகள்

பொறுமையாகவும், பொறுப்புடனும் இருப்பார்களாம் இந்த ராசியினர்: வாரப் பலன்கள்!

16th Sep 2022 04:59 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொறுமையாகவும், பொறுப்புடனும் நடந்துகொள்வீர்கள். மனம்விட்டு பேசுவீர்கள். புதிய வீடு, மனைகளை  வாங்கும் எண்ணம் மேலோங்கும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன்கள் கிடைக்கும்.  

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகள் மகசூலைப் பெருக்குவார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள்.  

ADVERTISEMENT

கலைத்துறையினர் பிரபலங்களைச் சந்திப்பார்கள்.  பெண்கள் குடும்பத்தில் அமைதி நிறைய காண்பார்கள். மாணவர்கள் மாற்றம் உண்டாக வழியைக் காண்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். அரசு வழியில் நன்மைகள் உண்டாகும்.  உத்தியோகஸ்தர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் வெற்றி பெறுவார்கள்.  

வியாபாரிகள் கூட்டாளிகளின் முழு ஒத்துழைப்பை பெறுவார்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதில் முடித்துவிடுவார்கள். 

கலைத்துறையினருக்கு ரசிகர்களின் பாராட்டுகள் தொடர்ந்து கிடைக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

முக்கிய விஷயங்களில் பழைய அனுபவம் கை கொடுக்கும்.  உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் சிரமம் உண்டாகும். 

வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.  விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகவே இருக்கும். அரசியல்வாதிகள் கட்சியில் முக்கியப் பொறுப்புகளைப் பெறுவார்கள். 

கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.  பெண்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளியிடாதவாறு குடும்பத்துடன் பழகுவார்கள். மாணவர்களுக்கு நேர்மறை சிந்தனைகள் தோன்றும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரும். குல தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேற்றுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.  உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவார்கள். 

வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளைச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவார்கள்.  விவசாயிகளுக்குக் கொள்முதல் சீராக இருக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும். 

கலைத்துறையினரை புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்களுக்கு உடல், மன வளம் மேன்மையாகவே இருக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

நினைத்த காரியம் நடப்பதில் காலதாமதம் உண்டாகும்.  சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சாதகமாகவே முடிவடையும். 

வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்துவார்கள்.  அரசியல்வாதிகளோ அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். 

கலைத்துறையினர் கலை தொடர்பான மாநாடுகளில் பங்கேற்பார்கள். பெண்களுக்கு பொருளாôரம் சீராகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் 
உண்டாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கவலைகள் நீங்கும்.  பிடிவாத குணத்தைக் குறைத்து கொள்வீர்கள். கடன் பிரச்னைகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறி தென்படும்.

வியாபாரிகளுக்கு லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவார்கள். அரசியல்வாதிகள் சிறிய அலைச்சலைக் காண்பார்கள். 

கலைத்துறையினர் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டிய செய்து முடித்துவிடுவீர்கள். பெண்கள் ஆன்மிகத்திலும், தியானத்திலும் முழுமையாக ஈடுபடுவார்கள். மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.  விலகிச் சென்ற உறவினர்கள் திரும்புவதற்கான சூழல் அமையும்.  எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். 

வியாபாரிகளின் கூட்டு முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகளுக்கு புழு பூச்சிகளால் பாதிப்பு இருக்காது  அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும்.

கலைத்துறையினர் கண்ணியமாக நடந்துகொள்வார்கள்.  பெண்கள் குடும்பத்தில் வருமானம் உயரக் காண்பார்கள். மாணவர்களுக்கு அதிர்ஷ்டமான திருப்பம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் - 16,17.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மாற்றங்களைக் காண்பார்கள். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கலில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் பிறரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடத்தின் உதவி கிடைக்கும். 

கலைத்துறையினர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தேடாமலேயே பெறுவார்கள். பெண்கள் குடும்பத்தினரிடம் பாசத்துடன் இருப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 18,19,20.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மனதை உறுத்திய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  நீண்ட நாள் நண்பர்களைச் சந்திப்பீர்கள். புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலைக்கான முயற்சி கைகூடும். வியாபாரிகள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வார்கள். 

விவசாயிகள் புதிய இயந்திரங்களை வாங்கி மகிழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் சிறப்பான அனுபவங்களைப் பெறுவார்கள்.

பெண்கள் குடும்பத்தில் குதூகலம் நிறையக் காண்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 21,22.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிர்காலத்துக்காக நல்லத் திட்டங்களை உருவாக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் விரும்பும் முறையில் பணியாற்றி நற்பெயரை எடுப்பீர்கள்.  வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.  

விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களைப் பயிரிட்டு உபரி வருமானத்தைப் பெறுவார்கள்.  அரசியல்வாதிகள் சாத்தியமில்லாத தேவையற்ற சிந்தனைகளை சக்தியை வீணடிக்க மாட்டார்கள். 

கலைத்துறையினரின் எண்ணங்கள் ஈடேறும்.  பெண்கள் குடும்பத்தாரின் பாசத்தில் இருப்பார்கள். மாணவர்கள் தங்களது பணிகளை விரைவாக முடிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மன அமைதி கிட்டும். பொருளாதாரம் சீராகவே இருக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சேர்ந்து உழைக்க வேண்டியிருக்கும். 

விவசாயிகள் கால்நடைப் பராமரிப்பு செலவுகள் கூடும்.  அரசியல்வாதிகள் எவரிடமும் கருத்துகளைத் திணிக்க வேண்டாம். 

கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொள்ளவும். மாணவர்களுக்கு ஆசிரியர் - பெற்றோர் உதவிக்கரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடல், மன வளம் சீராக யோகா கற்றுக்கொள்ளுங்கள். பொருளாதாரம் படிப்படியாக உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு புதிய நிலங்களை வாங்க முயற்சி செய்வார்கள்.  அரசியல்வாதிகள் பதற்றப்படாமல் கட்சிப் பணிகளை ஆற்றுவார்கள். 

கலைத்துறையினரின் செயல்கள் வெற்றியைக் கொடுக்கும். பெண்கள் வருமானம் படிப்பாக உயரக் காண்பார்கள்.  குழந்தைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் விளையாடும்போது கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT