செய்திகள்

எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு மகரத்துக்கு: உங்க ராசிக்கு? வாரப் பலன்கள்

7th Oct 2022 05:40 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இறைவழிபாட்டில் மன அமைதியைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடத்தில் பணியிட மாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் வளர்ச்சியைக் காண்பார்கள்.

ADVERTISEMENT

விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும். பெண்கள் கணவரை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

திட்டமிட்ட வேலைகளை முடித்துவிடுவீர்கள்.  பூர்வீகச் சொத்துகளிலும் லாபம் கிடைக்கும். போட்டிகளைச் சமாளிக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை விரைந்து முடிப்பார்கள்.

வியாபாரிகளுக்கு கூட்டாளிகளிடமிருந்த பகைமை மறையும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்வார்கள். அரசியல் வாதிகள் பாராட்டப்படுவார்கள்.  

கலைத்துறையினருக்குப் பயணம் ஏற்படும். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். மாணவர்களின் தனித்தன்மை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஆதரவு பெருகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிறப்புகளைக் காண்பார்கள்.

விவசாயிகள் விவசாயத்தில் முழு வீச்சில் ஈடுபடுவார்கள். அரசியல்வாதிகள் உதவிகளைச் செய்வார்கள்.

கலைத்துறையினர் பிறரிடம் ஒற்றுமையாகப் பழகுவார்கள். பெண்கள் குடும்ப முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவார்கள்.  மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வாகனங்களை வாங்குவீர்கள். தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். பொருளாதாரம் மேன்மையடையும்.  சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் பணிகள் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகள் கொடுக்கல்-வாங்கலில் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் உழைத்து முன்னேறுவார்கள். 

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும்.  பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வார்கள். மாணவர்கள் உயர்கல்வி விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். 

சந்திராஷ்டமம் - 7.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி நிறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழிலை கவனமாக நடத்துவீர்கள். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு கடன்கள் கிடைக்கும்.  வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்குப் பயணங்களால் நன்மை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் உறவினர்களின் ஆதரவினால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - 8,9,10.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உடன்பணிபுரிவோரின் ஆதரவு உண்டு. இழுபறியான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாகப் பழகுவார்கள். 

விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களின் உதவியைப் பெறுவார்கள்.

கலைத்துறையினர் புதிய அங்கீகாரங்களைப் பெறுவார்கள். பெண்கள் பேச்சால் கவருவார்கள். மாணவர்கள்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - 11,12.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனை ஏற்படும். சமூகத்தில் பெயரும், அந்தஸ்தும் உயரும். புதிய நட்பு உருவாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இன்முகத்தோடு பழகுவார்கள்.

வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளை திரும்ப அடைப்பார்கள். அரசியல் வாதிகள் மேலிடத்தின் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்றுவார்கள்.

கலைத்துறையினரின் செயல்களில் வேகமும்,ஆற்றலும் கூடும். பெண்கள் நற்பெயரை எடுப்பார்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - 13.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வருவாய் சீராக இருக்கும். கடன் பிரச்னை இருக்காது. 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். அரசியல்வாதிகள் மனக் குழப்பங்களிலிருந்து விடுபடுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் பெற்றோரின் பேச்சை கேட்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். கொள்கை, லட்சியத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.  அரசுப் பணிகளில் நீடித்த  தாமதம் அகலும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளைப் புரிந்துகொள்வீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிட்டு வருவாய் காண்பீர்கள்.  

அரசியல்வாதிகள் பிறரிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். கலைத்துறையினருக்கு சாதகமான சூழல் உண்டாகும். பெண்களின் இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். மாணவர்கள் பிறருக்கு உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். சொத்துகளை வாங்குவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களில் நன்மைகளைக் காண்பார்கள்.

வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் உயர்வைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடி வரும். 

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் நட்பு கொள்வார்கள். கலைத்துறையினர் புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்வார்கள். பெண்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் பாசமாகப் பழகுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள்.

வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவார்கள்.  விவசாயிகள் பாசன வசதிகளுக்குச் செலவு செய்வார்கள். அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.  பெண்கள் பெரியோரைச் சந்தித்து ஆசி பெறுவார்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

காரியங்களைத் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். பூர்விகச் சொத்து
களில் வருவாய் வரத் தொடங்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள்.  அரசியல்வாதிகள்  கவனமாகச் செயல்படுவார்கள்.

கலைத்துறையினரின் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். பெண்கள் புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT