செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றம்!

28th Nov 2022 11:57 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், தங்ககுதிரை, காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

விழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக டிச.5-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு கோயில் 6 கால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல்கொடியுடன் பட்டாபிஷேகம் நடைபெறும்.

படிக்க: தங்கம் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை!

ADVERTISEMENT

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச.6-ஆம் தேதி காலை 11 மணிக்கு காா்த்திகை தேரோட்டமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

முன்னதாக காா்த்திகை தீபத் திருவிழாவிற்கான தேங்காய் தொடு முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் ஸ்தானிகப்பட்டா்கள் துணை ஆணையரிடம் சென்று திருவிழா விவரங்களை தெரிவித்துவிட்டு கோயில் கருப்பண சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT