செய்திகள்

ஊதிய உயர்வு கிடைக்கப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (20-26)

20th May 2022 05:28 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து ஆதரவு கூடும். பொருளாதாரத்தில் இழுபறிகள் மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் மாற்றம் உண்டாகும்.வியாபாரிகளின் தொடர் முயற்சிகள் பலிதமாகும். கூட்டாளிகள் உதவுவார்கள். விவசாயிகள் பயிர் விளைச்சலில் உயர்வைக் காண்பார்கள்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகள் வழக்குகளிலிருந்து விடுதலையாவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு உடன்பிறந்தோரின் உதவியால் சிந்தனை அதிகரிக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் கூடும். உடலாரோக்கியம், மன வளம் ஆகியன மேம்படும். உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பார்கள்.

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் நன்மைகளைப் பெறுவார்கள். வருவாய் பெருகும். விவசாயிகளுக்கு தொழிலாளர்களால் ஆதாயம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினர் பயணங்களால் பயனடைவர். பெண்கள் கணவரின் பாராட்டுதலைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் மதிப்பு உயரும். மாணவர்கள் உற்சாகத்துடன் முயற்சி செய்து, மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். மேலிடத்தின் பார்வை உங்கள் மீதே விழும். கலைத்துறையினர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காமல் திறமைகளைக் கூட்டிக் கொள்ளவும்.

பெண்கள் குடும்பத்தின் அலட்சியப் போக்கால் எரிச்சலடையாமல் செயலாற்றுங்கள். மாணவர்கள் கல்வியில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். ஆசிரியர்களின் ஆதரவு பெருகும்.

சந்திராஷ்டமம்} 20, 21.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கடுமையான உழைப்பால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். விவசாயிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரத் தொடங்கும். கலைத்துறையினர் புதுமையைப் புகுத்துவார்கள். பெண்கள் கணவரால் பாராட்டப்படுவார்கள். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பெருமை அடைவார்கள். 

சந்திராஷ்டமம் -  22, 23, 24.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

மனக் குழப்பங்களில் இருந்து விடுபட்டு தெளிவுடன் சிந்திப்பீர்கள். வருமானம் சீராகத் தொடங்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரிகள் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலன்களை அடைவார்கள். அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வருமானத்தையே பெறுவார்கள். திறமைகளை சரியாக வெளிப்படுத்துவார்கள். பெண்கள் கணவரிடம் ஒற்றுமையாகப் பழகுவார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.  

சந்திராஷ்டமம் -  25, 26.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த வாரம் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமயோஜித புத்தி நன்கு வேலை செய்யும். சுப காரியங்கள் நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிறப்பைக் காண்பார்கள். விவசாயிகள் ஊடுபயிர் செய்து கூடுதல் வருவாய் காண்பார்கள்.  அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து, நற்பெயர் எடுப்பார்கள்.

கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வார்கள். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி காண்பார்கள்.  மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சிறு ஆதாயங்களைப் பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும். அலைச்சல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உதவிகளைப் பெறுவார்கள்.  

வியாபாரிகளுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும். விவசாயிகள் தக்க நேரத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால், நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.  அரசியல்வாதிகள் சமூகத் தொண்டுகளில் ஈடுபடுவார்கள்.

கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். பெண்கள் கணவரின் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து
கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் எடுத்துக்கொள்வார்கள். 
சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

செய்தொழிலில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் கடமைகளை சரிவரச் செய்வார்கள்.  

வியாபாரிகள் ஒதுக்கி வைத்திருந்த காரியங்களை எடுத்து நடத்த முயற்சிகளை மேற்கொள்வார்கள்.  விவசாயிகள் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவார்கள்.  அரசியல்வாதிகள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.

கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடப்பார்கள்.  பெண்கள் கணவரோடு ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். மாணவர்கள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொலைதூரச் செய்தி சுபச் செய்தியாக வரும். செய்தொழிலில் புதிய வழிகள் தென்படும். செயல்களில் உத்வேகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் செயல்களை மாற்றிக் கொள்வீர்கள்.  

வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.  பொருளாதாரம் மேம்படும். விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானத்தால், கடன்களை அடைப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

கலைத்துறையினர் பொறுப்புடன் பணியாற்றி வெற்றி பெறுவார்கள். பெண்கள் மனதில் பட்டதை உடனுக்குடன் பேச வேண்டாம். மாணவர்கள் முயற்சிகளைச் செய்து வரவும்.  
சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி நிறையும். உடன்பிறந்தோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். புதிய வழிகளில் வருமானம் வரும்.

உத்தியோகஸ்தர்கள் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு பணிபுரிவார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவி செய்வார்கள்.

கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள். பெண்களுக்கு உடலாரோக்கியம்  மேம்படத் தொடங்கும்.  மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

புதிய வருமானத்தைக் காண்பீர்கள். சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள்.  உங்கள் தன்னம்பிக்கை உயரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைநுட்பங்களைக் கற்றுக்கொள்வார்கள். வியாபாரிகள் தயக்கங்கள், குழப்பங்களைத் தவிர்த்து செயல்களில் முனைப்புடன் ஈடுபடுவார்கள்.

விவசாயிகள்  உயர்வடைவார்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் சுற்றத்தாரிடம் இனிமையாகப் பழகுவீர்கள். மாணவர்கள் பிரச்னைகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

ஊக்கத்துடன் முயற்சி செய்து உழைத்து வெற்றி பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயரை எடுப்பார்கள்.

வியாபாரிகள் நன்றாக உழைப்பார்கள். விவசாயிகள் கடுமையான உழைப்புக்குப் பிறகு தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் தங்களது உள்திறனை வெளிப்படுத்தி  பரிமளிப்பார்கள். கலைத்துறையினர் நன்றாக உழைத்து பொருள் ஈட்டுவார்கள்.பெண்கள் குடும்பத்தாரிடம் உறவு பாதிக்காமல் பார்த்துக் கொள்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT